தமிழ்நாட்டில் அய்ந்து பெரிய தொழில் நிறுவனங்கள் தொடங்க முடிவு

3 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, மே 3- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கேட்டர் பில்லர், பெட்ரோனாஸ் உள்ளிட்ட 5 தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா, பட்ஜெட் அறிவிப்புகள் குறித் தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொருளாதாரத்தை வரும் 2030இல் ஒரு டிரில்லியன் டால ராக உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற் கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதி யாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க் கும் வகையில், வரும் 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த முடிவெடுத்து, அதற்கான அடிப் படைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிக அளவில் தொழில் முதலீடு களை ஈர்ப்பதற்கு, வெளிநாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள், தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இதற்கு அமைச்சரவை கூடி முடிவெ டுக்க வேண்டியது அவசியம்.

இதுதவிர, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.  தொடர்ந்து, துறை கள் வாரியாக நடந்த மானியக் கோரிக்கை யிலும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப் பட்டன. இதற்கு தேவையான நிதி ஆதாரங் கள் குறித்தும் பொதுவாக அமைச்ச ரவைக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச் சரவை நேற்று (2.5.2023) காலை 11 மணிக்கு கூடியது.

இதில், துரைமுருகன், கே.என்.நேரு, திண்டுக்கல் இ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தொழில் துறை செய லர் கிருஷ்ணன், நிதித் துறை செயலர் முருகானந்தம், பொதுத் துறை செயலர் ஜகந்நாதன் மற்றும் உதயச்சந்திரன் உள்ளிட்ட முதலமைச்சரின் செயலர் களும் பங்கேற்றனர்.

இக்கூட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. முதலில் தொழில் துறை தொடர்பான விவரங்கள் ஆலோசிக்கப் பட்டன. சமீபத்தில் சுவீடன், பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பயணம் மேற்கொண்டு, பல்வேறு தொழில் முதலீட்டு நிறுவ னங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய துடன், அந்த நாடுகளின் தொழில் வர்த்தக அமைச்சர்கள், கூட்டமைப்பு களுடனும் முதலீடு தொடர்பாக பேசியுள்ளார்.

இந்த தகவல்கள் அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

5 நிறுவனங்களுக்கு அனுமதி

தொடர்ந்து, கேட்டர்பில்லர், பெட் ரோனாஸ் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுசெய்ய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான அனுமதிகளை வழங்க அமைச்சர வையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதவிர, முதலமைச்சர் இம்மாத இறுதியில் அரசுமுறை பயணமாக லண்டன், சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார். தொடர்ந்து அமைச்சர்களும் வெளிநாட்டுப் பய ணம் மேற்கொள்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள், தொழில் புரிந்துணர்வு ஒப்பந்த முன்னேற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மறைந்த மேனாள் முதலமைச்சர் கலை ஞர் நூற்றாண்டு விழா, அவரது பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி தொடங்க உள் ளது. இதைத் தொடர்ந்து, ஜூன் 5ஆம் தேதி சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையை குடிய ரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைக்கிறார்.  அதே நாளில் சென்னையில் நடை பெறும் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியிலும் பங்கேற் கிறார்.

இந்த நிகழ்ச்சிகளை நடத்துவது, திருவாரூரில் கலைஞர் அருங்காட் சியகம் திறப்பு விழா, ஓராண்டுக்கு அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்தும் அமைச்சர வையில் ஆலோசிக்கப்பட்டு, அமைச்சர் களுக்கு பல்வேறு ஆலோசனைகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார். 

இதுதவிர, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட குடும்பத் தலைவி களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்கள், துறைகள் தோறும் வெளியிடப்பட்ட திட்ட அறிவிப்புகளுக்கான நிதியை உறுதிப்ப டுத்தும் வகையிலும் ஆலோசனை நடத் தப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, திமுக சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட் டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலை யில், அரசு சார்பில் 2 ஆண்டு சாதனை கள், திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூறுவது தொடர்பாகவும் பல்வேறு ஆலோசனைகளை முதல மைச்சர் வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *