வைகோ
மதிமுக பொதுச் செய லாளர் மாநிலங்களவை உறுப் பினர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள்ளதாவது,
உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாளாம் மே நாளில், தமிழ்நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கி யிருக்கின்ற தமிழ்நாடு முதல மைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி யைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
தமிழ்நாடு சட்ட மன்றத்தில் ஏப்ரல் 21ஆம் தேதி நிறை வேற்றப்பட்ட, தமிழ்நாடு சட்ட மன்றம் தொழிற்சாலை கள் (தமிழ்நாடு திருத்த) சட்டம் -2023, சட்ட முன் வரைவை திரும்பப் பெறு வதாக அறிவித்துள்ளது வர வேற்கத்தக்கதாகும்.
8 நேரம் வேலை என் பதை உலகத் தொழிலா ளர் வர்க்கம் இரத்தம் சிந்தி உயிர்ப் பலிகளைக் கொடுத்து பெற்ற உரிமை யாகும்.
அதனைப் பாதுகாக்கும் வகையில், திராவிட மாடல் அரசு தொழிலாளர்களுக்கு என்றும் துணையாக இருக்கும் என்பதை முதலமைச்சர் அவர் கள் பிரகடனப்படுத்தியிருக் கிறார்.
இந்தியாவிலேயே முதன் முதலில் மே தினத்தை 1923ஆம் ஆண்டு சென்னையில் கொண் டாடியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலனார் ஆவார்.
தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளை முறியடிப் பதற்கு தமிழ்நாட்டில் மே தினம் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு நிறைவில் உறுதி கொள்வோம்.
-இவ்வாறு அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத் தரசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட் டுள் ளதாவது,
கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழ்நாடு சட்ட மன்றத்தில், எதிர்ப்புகளுக்கு மத்தி யில் குரல் வாக்கெடுப்பில் தொழிற் சாலைகள் (தமிழ்நாடு திருத் தச்) சட்டம் 2023 நிறைவேற் றப்பட்டது.
தொழிலாளர்களின் வேலை நேர உரிமையை மறுக்கும் இச்சட்டத் திற்கு எதி ராக தொழிலாளர்களும், தொழிற் சங்கங்களும் போராட் டத்தில் ஈடுப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர், தொழிலாளர் துறை அமைச்சர், தொழிற் சங்கத் தலைவர்களை அழைத் துப் பேசிய நிலையில், தொழிற் சாலைகள் திருத்தச் சட் டத்தை நிறுத்தி வைப்பதாக மாண்பு மிகு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்தார்.
தொழிலாளர் உரிமை நாளான (01.05.2023) 137ஆவது மே தினத்தில் பங் கேற்ற முதலமைச்சர், தொழிற் சாலைகள் திருத்தச் சட்டம் 2023 முற்றிலுமாக திரும்பப் பெறப் பட்டது என அறிவித்த மகிழ்வான அறிவிப்பை இந் தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
தொழிலாளர்கள், ஜனநாயக சக்திகளின் உணர்வு களுக்கு மதிப்பளித்த முதல மைச்சருக்கும், அரசுக்கும் நன்றிகளை -_ பாராட் டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.
-இவ்வாறு இரா.முத்தரசன் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார்.
தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சிதம்பரம் தொகுதி மக்க ளவை உறுப்பினர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது,
உலகத் தொழிலாளர்கள் கொண்டாடும் உன்னத நாளான மே நாளில் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த யாவ ருக்கும் விசிக சார்பில் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொழிற்சங்க உரிமை களையும் தொழிலாளர் நலன் களையும் பாதுகாத்திட இந் நாளில் உறுதியேற்போம். தமிழ்நாடு முதலமைச்சர், அண்மையில் சட்டப் பேரவை யில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை என்னும் சட்ட மசோ தாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்த துடன், இன்றைய மே நாளில் அதனைத் திரும்பப் பெறு வதாக அறிவித்துள்ளார்.
எட்டுமணி நேர வேலையை மீண்டும் உறுதிப்படுத்திய முதலமைச்சர் அவர்களின் இந்த நிலை பாட்டை விடு தலைச் சிறுத் தைகள் கட்சி வரவேற்றுப் பாராட் டுகிறது.
அத்துடன் முதலமைச்சர் அவர்களுக்கு பாட்டாளி வர்க்கத்தின் சார்பில் எமது மனமார்ந்த நன்றியை உரித் தாக்குகிறோம்.
தொழிலாளர்கள் ஒன்று கூடினால் உரிமைகளை வென் றெடுக்கவும் அவற்றைப் பாது காக்கவும் இயலும் என்பதற்குச் சான்றாக இந்த வெற்றி அமைந் துள்ளது. இன்றையநாள் உழைக்கும் மக்களின் வெற்றி நாள்.
தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க தொழிற்சங்க உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்குத் தடையாகவுள்ள சட்டத் தொகுப்பின் சில பகுதிகளை நீக்குவது இன்றிய மையாத ஒன்றாகும்.
எனவே, அவற்றை நீக்கிட ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டு மென இந்நாளில் தமிழ்நாடு அரசுக்கு வேண்டு கோள் விடுக் கிறோம்.
வெல்க தொழிலாளர் ஒற்றுமை!
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.