டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம்: 107 எம்.பி.க்கள் கையெழுத்துடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
* வாக்குத் திருட்டு தான் மிக மோசமான தேசவிரோதச் செயல்: தேர்தல் ஆணையம் ஆர்எஸ்எஸ் வசம் உள்ளது; மக்களவையில் எஸ்அய்ஆர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பரபரப்பு பேச்சு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தொழில்நுட்பம் மற்றும் மருத்துவப் படிப்புகள் மற்றும் அரசு வேலைகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் எஸ்டி, எஸ்சி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அதிகாரப்பூர்வ தீர்மானத்தை மாநில அரசு கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று ஒடிசா பிரதேச காங்கிரஸ் கமிட்டி (OPCC) தீர்மானம்.
தி இந்து:
* எஸ்.அய்.ஆர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தேர்தல் ஆணையம் ‘இயந்திரத்தனமான’ பதில்களை தருகிறது, உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்.
*தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவில் மாற்றம் வேண்டும். இதில் இந்திய தலைமை நீதிபதி மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை.
தி டெலிகிராப்:
* அரசியலமைப்புச் சட்டத்திலோ அல்லது சட்டத்திலோ வாக்காளர் சிறப்புத் திருத்தத்திற்கு ஏற்பாடு இல்லை, அது நிறுத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி மக்களவையில் பேச்சு.
– குடந்தை கருணா
