கோவை, டிச. 10- கோவை சுந்தரா புரம் பகுதியை சேர்ந்த கழகத் தோழர் ந.குரு என்கிற குருவாயூரப்பன் (வயது 57) 6/12.2025 அன்று அதிகாலை 2 மணி அளவில் மறைவுற்றார்.
இறுதி மரியாதைக்காக அவருடைய இல்லத்தில் உடல் வைக்கப்பட்டு இருந்தது.
கோவை மாவட்ட கழகத் தலைவர் ம.சந்திரசேகர், தி.க செந்தில்நாதன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் நேரில் சென்று மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
மாலை 5 மணி அளவில் ஆத்து பாளம் மின் மயானத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது இல்லத்தில் இருந்து அவரது உடலை மாவட்ட மகளிரணித் தலைவர் ப.கலைச்செல்வி, மகளிர் பாசறை கு.தேவிகா, திலகமணி, ராஜேஸ்வரி, தேவி உள்ளிட்ட மகளிரே சுமந்து வீர வணக்கம் முழக்கம் எழுப்பி வாகனத்திற்கு கொண்டு வந்தனர். அவரது உடலைச் சுமந்து கொண்டு மின் மயானத்திற்கு வாகனம் ஊர்வலமாக புறப்பட்டது.
வாகனத்தின் முன்னும் பின்னும் கழகத் தோழர்கள் நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் மூலம் பயணித்து ஆத்து பாலம் மின் மயானத்திற்கு வாகனம் வந்து சேர்ந்தனர்.
வாகனத்தில் இருந்து மீண்டும் கழக மகளிரணித் தோழர்கள் உடலை சுமந்து எரியூட்டப்படும் இடத்தில் கொண்டு வந்து வைத்தனர். கழகத் தோழர்கள் வீரவணக்கம் முழக்கம் எழுப்பி இறுதி மரியாதை செலுத்தினர்.
கோவையில் திராவிடர் கழக போராட்டம் என்றாலும் ஆர்ப்பாட்டம் என்றாலும் ந.குரு முன்னணி வீரராக வந்து ஆர்வத்துடன் பங்கேற்றவர்.
நமது பொதுக்கூட்டம் மற்றும் கலந்துரையாடல் கூட்டங்கள் அனைத்திலும் கலந்து கொண்டவர். கழகத் தோழர்களிடம் இன்முகத்துடன் பழகியவர். அவரது வாழ்வி ணையர் நிர்மலாதேவி, மகன்கள் விஜயன், அஜித் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு அவர் மறைவு பெரும் இழப்பாகும்.
அவரை போன்ற ஒரு கருப்புச் சட்டை தொன்டரை இழந்தது இந்த பகுதியில் இயக்கத்திற்கு பேரிழப்பாகும் அவர் விட்டுச் சென்ற கொள்கைப் பணியை அந்த குடும்பத்தினர் தொடர்ந்து செய்ய அவர் விரும்பிய இலட்சியத்தை கடைப்பிடிக்க உறுதி ஏற்று கழகத் தோழர்கள் மரியாதை செலுத்தினர் பகுதி கழக செயலாளர் தெ,.குமரேசன், கழக மாவட்ட இளைஞரணி சா.ராசா, மாநகர தலைவர் புலியகுளம் க. வீரமணி, த.க கவுதமன், முத்துமாலையப்பன், தமிழ்முரசு, பீளமேடு ரமேஷ், திராவிடமணி, அக்ரி நாகராஜ், பெயிண்ட்டர் குமார், கிருஷ்ண மூர்த்தி, போத்தனூர் வெங்கடேஷ், வெற்றிச்செல்வன், முத்து கணேசன், ஆட்டோ சக்தி, இலைக்கடை செல்வம் உள்ளிட்ட ஏராளமான திரா விடர் கழகத் தோழர்கள் திரண்டு வந்து அவரின் மறைவுக்குப் வீரவணக்கம் செலுத்தினார்கள்.
