திருவனந்தபுரம், டிச.10 கேரள உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், சபரிமலையில் விதிக்கப்பட் டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. இந்நிலையில், சன்னிதானத்தில் நேற்று (டிசம்பர் 8, 2025) கூடுதல் மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையில் உயர் அதிகாரி களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு கூடுதல் மாவட்ட ஆட்சியர் அருண் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சபரிமலைக்கு வரும் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் பாரம்பரியமான காட்டு வழிப் பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். “அவர்கள் அனைவரும் நிலக்கல் பம்பை வழியாக சபரிமலைக்கு வருவது பாதுகாப்பானது. யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் இந்த வனப் பகுதிகளில் அதிக அளவில் இருப்பதால், பாதுகாப்புக் கருதி இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த வழிகளில் வனத்துறை மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போதிலும், பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
