சென்னை, மே 4 – உலக பத்திரிகை சுதந்திர நாளில், பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘பல்வேறு தாக் குதல்கள், அச்சுறுத்தல்களுக்கு இடையிலும், ஜனநாயகத்தின் நான்காவது தூணை வலிமையாக வைத்திருக்க வேண்டி மனச்சான்றுபடி பணியாற்றும் துணிச்சல்மிகு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் உலக பத்திரிகை சுதந்திர நாளில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.