சென்னை,மே4- சித்தா பல்கலைக்கழகத்துக்கு மாதவரம் பால் பண்ணையில் இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சித்த மருத்துவ பல்கலைக் கழக. மசோதா குறித்து ஆளுநரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு எதிரானதாக சித்தமருத்துவ பல்கலைக்கழக மசோதா இல்லை என அவர் விளக்க மளித்துள்ளார்.