பெங்களூரு,மே 4 – கருநாட கத்தில் பா.ஜனதா அரசு 40 விழுக்காடு கமிஷன் கொள்ளையில் ஈடுபட்டபோது நீங்கள் ஏன் தடுக்கவில்லை? என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கருநாடக சட்டசபை தேர்த லையொட்டி காங்கிரஸ் வேட்பா ளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கரு நாடகத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று (3.5.2023) அவர் விஜ யாப்புரா மாவட்டத்தில், காங் கிரஸ் வேட் பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார். முன்னதாக அவர் திறந்த வாகனத் தில் ஊர்வலம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
எல்லாம் அறிந்தவர், சர்வ வல்லமை படைத்தவர் மற்றும் சகலமும் நிறைந்தவர் போல் பேசும் பிரதமர் மோடி கருநாடக பா.ஜனதா அரசு மக்களிடம் கொள்ளையடித்ததை பார்க்கவில் லையா?. கருநாடக அரசு அனைத் துப் பணிகளை மேற்கொள்ள 40 சதவீத கமிஷன் பெற்றது அனை வரும் அறிந்ததே. இருப்பினும் அதை பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை.
‘விகாஷ் புருஷ்'(அனைத்தும் அறிந்த ஞானி) போல் பேசும் பிரதமர் மோடி தற்போதும் கருநா டகத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்ய கனவு காண்பதாகவும், நாட்டிற்கே கருநாடகத்தை ஒரு மாதிரி மாநிலமாக உருவாக்க நினைப்பதாகவும் கூறி வருகிறார். இந்த உலகமே பிரதமர் மோடியை ‘சர்வ வல்லமை படைத்தவர்’, ‘எல்லாவற்றுக்கும் மேலானவர்’, ‘அனைவருக்கும் தலைவர்’, ‘விகாஷ் புருஷ்’ என்று அழைத்தாலும் அந்த வார்த்தைகளுக்கு எல்லாம் அவர் தகுதியானவரா?.
நீங்கள்(பிரதமர் மோடி) ஏன் உங்கள் கனவை இதுவரை நிறை வேற்றவில்லை?. பா.ஜனதா அரசு மக்களிடம் 40 சதவீதம் பெற்று கொள்ளையடித்தபோது அதை ஏன் நீங்கள் கண்டுகொள்ள வில்லை?.
பா.ஜனதா அரசு ஊழல், கொள்ளையில் ஈடுபட்டபோது பிரதமர் மோடி கண்களை மூடிக் கொண்டு கனவு கண்டு கொண்டி ருந்தார் போலும். நீங்கள்(பிரதமர் மோடி) ஆழ்ந்த கனவில் இருந்தது, நீங்களே கொள்ளை மற்றும் திருட் டுக்கு அனுமதி அளித்து விட் டீர்கள். நீங்கள் யாரையும் தடுக்க வில்லை. உங்கள் அரசு ’40 சதவீத கமிஷன் அரசு’ என்று அழைக்கப் படுவதை நீங்களே தெளிவுபடுத்த வேண்டும்.
ஒரு காண்டிராக்டர் தன்னிடம் 40 சதவீத கமிஷன் கேட்டு தொல்லை கொடுப்பதாக பகிரங் கமாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலையும் செய்து கொண் டார். ஆனால் அதற்கு பிரதமர் பதிலே அளிக்கவில்லை. ஏன் பிரதமர் மோடி விவசாயிகள் தற் கொலை செய்து கொள்வதையும் கண்டுகொள்ளாமல் தான் இருக் கிறார்.
பா.ஜனதா அரசு செய்த ஊழல், கொள்ளை, அரசுத் துறைகளிலும், பணி நியமனங்களிலும் நடந்த முறைகேடுகள் ஆகியவை தேர்தல் வந்தவுடன் மறக்கடிக்கப்படுகிறது. ஆனால் அதை மக்கள் மறக்க வில்லை.
பெங்களூருவில் 35 பேர் சாலை பள்ளங்களால் உயிரிழந்துள்ளனர். தற்போது பா.ஜனதா தலைவர்கள் தலைகுனிந்து உள்ளனர். அவர்க ளால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. இதுதவிர பெங்களூருவுக்கு வர வேண்டிய ஏராளமான பன்னாட்டு நிறுவ னங்கள் சென்னை, அய்தராபாத் மற்றும் பிற பெரு நகரங்களுக்கு சென்றுவிட்டன. அதற்கு காரணம் கொள்ளை காரணமாக உள்கட் டமைப்பு வசதிகள் பாதிக்கப் பட்டது தான்.
மேலும் கருநாடகாவின் நந் தினி பாலை ஒழித்துக்கட்ட பா.ஜனதா அரசு முடிவு செய்து விட்டது. அவர்கள் கருநாடகத்தில் குஜராத்தை தலைமையிடமாகக் கொண்ட அமுல் பாலை ஊக்கு வித்து வருகிறார்கள். கருநாடக அரசு துறைகளில் 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருந்தும், அதை இந்த அரசு நிரப்பவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் சரி செய்யப் படும். கருநாடகத்தில் வேலை வாய்ப்பு குறைந்ததற்கு ஒன்றிய பா.ஜனதா அரசு முக்கிய காரணம் ஆகும். அவர்கள் இங்குள்ள அரசு பொதுத்துறைகளை தனியாருக்கு விற்று சின்னாபின்னமாக்கி விட் டனர். மேலும் சிறு தொழில்களின் முதுகெலும்பையும் உடைத்து விட்டனர்.
-இவ்வாறு அவர் கூறினார்.