மோடி அமைச்சரவையில் சிறந்த பொய் சொல்பவர்கள் யார் என்ற போட்டியோ?

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச. 9 ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் ரயில்வே இந்திய துறையின் சேவையைப் பற்றி  கூறும் போது பல்வேறு அய்ரோப்பிய நாடுகளை விட சிறப்பான ரயில் சேவை இந்திய ரயில்வே தருகிறது என்று கூறினார்.

ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் நாட்டு ரயில்கள்  மணிக்கு 320 கிலோமீட்டர் வேகம், வினாடிகள் கூடத் தவறாத துல்லியமான ரயில் புறப்பாடு மற்றும் வருகை, வீடுகளில் இருப்பது போன்ற ரயில் பெட்டிகளின் உள் வேலைப்பாடு, சிறிதும் ஓசை மற்றும் குலுங்கல் இல்லாத ரயில் ஓட்டம் என அய்ரோப்பிய நாட்டு ரயில்கள் நாம் இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் கூட எட்டாத இலக்குகளை அடைந்துள்ளன.

நேற்றுமுன்தினம் (7.12.2025) மட்டும் டில்லியில் இருந்து பாட்னா, லக்னோ, வாரணாசி, முகல்கஞ்ச் பானிபட், சிலிகுரி, ஜலந்தர் கண்டோன்மெண்ட், உள்ளிட்ட மிகவும் முக்கியமான ரயில் நிலையங்களுக்குச் செல்லும் ரயில்கள் பனிமூட்டம் மற்றும் பல்வேறு தொழில் நுட்பக் கோளாறு காரணங்களால் 3 முதல் 8 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டன என்று ரயில்வே நிர்வாக இணையதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் போது ஓர் அமைச்சர் பச்சையாகவே அய்ரோப்பிய நாடுகளோடு இந்திய ரயில்வே சேவையை ஒப்பிடுவது எப்படி?

செப்டம்பர் மாதம் ஒன்றியப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, துபாய் போக்குவரத்து துறை தன்னை சில மாதம் அங்கு சென்று சாலைகள் மேம்பாடு தொடர்பாக ஆலோசனை கூறுமாறு கூறியதாகக் கூறினார்.

உடனடியாக சமூகவலைதளங்களில் கிளம்புங்கள் சற்றும் தாமதிக்காதீர்கள் என்று பகடி செய்தனர்.

இப்போது ரயில்வே அமைச்சரும் காமெடி செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கு ஒருவேளை பொய் சொல்வதில் சிறந்தவர்கள் யார் என்ற போட்டி வைத்துள்ளாரோ என்னவோ?

மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் ஜாமீன் தளர்வுகளை வழங்கி
உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி,டிச.9  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் ஜாமீன் தளர்வுகளை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் மட்டும் விசாரணைக்காக செந்தில் பாலாஜியை அழைக்கலாம் என அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை இன்னும் தொடங்கப்படாத நிலையில், வாரந்தோறும் எதற்காக செந்தில்பாலாஜி ஆஜராக வேண்டும்? விசாரணைக்கு நேரில் அழைக்கும்போது விலக்கு வேண்டுமெனில் செந்தில்பாலாஜி நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.

2022 மற்றும் கடந்த அக்டோபரில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார்.

மசோதாவில் திருத்தங்கள் வேண்டும் எனச் சொல்லி ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்து வந்த நிலையில் குடியரசுத் தலைவருக்குஅனுப்பி வைத்தார்.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *