புதுடில்லி,மே 4 – காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியாவை அவமதித்த பா.ஜ சட்டமன்ற உறுப்பினர் பசவனபாட்டில் யத்னால்வுக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பி உள்ளது.கருநாடக தேர்தல் பிரச்சா ரத்தில் பசவனபாட்டில் யத்னால் காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தியை விஷக்கன்னி என்று விமர்சனம் செய்தார்.
இதுபற்றி கோப்பால் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் காங்கிரசார் புகார் அளித்தனர். இதுபற்றி விசாரித்த தேர்தல் ஆணையம் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கும்படி சட்டமன்ற உறுப்பினர் பசவனபாட்டில் யத்னால்வுக்கு தாக்கீது அனுப்பி உள்ளது.