திருப்பரங்குன்றம் வழக்கில் சர்ச்சைக்குரிய உத்தரவைப் பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் தாக்கல் செய்ய முடிவு செய்தனர்.
அந்த அடிப்படையில் தி.மு.க. சார்பில் மக்களவையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் 120 பேரின் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளன.
இன்று நாடாளுமன்ற அலுவல்கள் தொடங்கும் முன்பு மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லாவிடம் தீர்மான மனு வழங்கப்பட்டது.
அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரியங்கா காந்தி, கனிமொழி, டி.ஆர். பாலு, ஆ. இராசா, அகிலேஷ், துரை வைகோ, திருமாவளவன் மற்றும் பலர் உடனிருந்தனர். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் போலவே தன்னைக் காட்டிக் கொள்ளும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பல்வேறு வழக்குகளிலும் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளையும், கருத்துகளையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
