ஒரே கொள்கைதானே!
*கொள்கையில் சமரசமில்லாத கட்சி பி.ஜே.பி.யே!
– பி.ஜே.பி. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா
>> இன்றுதான் உண்மையைப் பேசியிருக்கிறார்! பிற மத வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும், சிறுபான்மை யினர் மீது தாக்குவதும், ஏசுவதும் என்ற அந்த ஒரே கொள்கைதானே பி.ஜே.பி.,க்குச் சொந்தமானது!
அதனால்தானே..!
*அம்பேத்கரின் அர்ப்பணிப்பு நம்மை வழிநடத்துகிறது.
– பிரதமர் மோடி
>> ஆமாம், அதனால்தான் அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்ந்தெடுத்து, பாபர் மசூதியை இடித்தார்கள்!
