ஒரு திரவத்தில் இருக்கும் பாக்டீரியாவை கண்டுபிடிக்க ஒரே வழி தான் உள்ளது. அது, திரவத் திலுள்ள கிருமிகளை ஆய்வகத்தில் வளரச் செய்வதுதான். இதற்கு சில மணி நேரங்கள் முதல் சில நாட்கள் வரை ஆகலாம். ஆனால், லேசர் கதிரை வைத்து உருவாக்கப் பட்டுள்ள ஒரு புதிய முறையில், சில நிமிடங்களில், திரவத்திலிருப்பது என்ன பாக்டீரியா என்பதை அறியலாம். அமெரிக்கா வின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ள லேசர் தொழில்நுட்பத்தில், சில முன்னேற்பாடுகள் தேவை. திரவத் தில் உள்ள பாக்டீரியா, லேசர் ஒளியை பிரதிபலிக்கும். அந்த பிரதிபலிப்பு, பாக்டீரியாவின் ரகத் துக்கு ரகம் மாறும்.
ஆனால், பாக்டீரியாவுடன் பிற நுண் பொருட்களும் லேசரை பிரதிபலித்து, சமிக்ஞையை குளறு படியாக்கிவிடும்.
எனவே, திரவத்தில் தங்க நுண்துகள்களைக் கலந்து, ஒரு கண்ணாடி தகட்டில், மிகச் சிறிய துளிகளாக வைத்து லேசர் ஒளியை செலுத்தினால், தங்கத் துகளோடு ஒட்டிய பாக்டீரியாக்கள் சற்று பிரகாசமாக ஒளிரும். இதன் மூலம் அது என்ன வகை பாக்டீரியா என்பதை ஆய்வகத்தினரால் உடனே கண்டறிய முடியும். இது நடைமுறைக்கு வந்தால் விரைவில் நோயறிய முடியும்.