அகமதாபாத், மே 4 – குற்றவியல் அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க, குஜராத் உயர்நீதி மன்றம் மறுத்து விட்டது. மே 8 துவங்கி ஜூன் 3 வரையிலான கோடை விடுமுறைக்குப் பின்னரே இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் குஜராத் உயர்நீதிமன்றம் கூறிவிட்டது. இதனால், அவர் உச்சநீதிமன்றத் திற்கு செல்ல வேண்டிய கட்டா யத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார்.