மக்களின் உயிரோடு விளையாடும் சாமியார்கள்!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கருப்புப் பணப்புகழ் சாமியார் ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலி சுத்தமான நாட்டுப்பசு நெய் என்ற பெயரில் விற்பனைக்கு விட்ட நெய் பயன்படுத்தத் தகுதியற்றது என்ற ஆய்வறிக்கையை அடுத்து அந்த நிறுவனத்திற்கு வெறும் ரூ.1 லட்சம் மட்டும் அபராதம் விதித்து விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அனைத்து நெய்யையும் திரும்பப் பெறவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

பதஞ்சலி நெய் பயன்படுத்துவோர் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக வந்த புகாரை அடுத்து 2020 ஆம் ஆண்டில் அந்த நெய்யை உணவு பாதுகாப்புத்துறை ஆய்விற்கு எடுத்தது.

இந்த ஆய்வு அறிக்கையின்படி அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு (அதாவது 2025இல்) நெய் தரமற்றது என நிரூபிக்கப்பட்டு, நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்து, தயாரிப்புகளைத் திரும்பப் பெற உத்தரவிட்டது,

இது உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளை உறுதிப்படுத்துவதில் உள்ள ஓட்டைகளையும், சட்டரீதியான நடவடிக்கைகளில் ஏற்படும் காலதாமதத்தையும் சுட்டிக் காட்டுகிறது.: நீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தது மற்றும் அனைத்து நெய்ப் பொருட்களையும் சந்தையிலிருந்து திரும்பப் பெற உத்தரவிட்டது என்பது, அந்தத் தயாரிப்பு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தரநிலைகளை மீறியுள்ளது என்பதை உறுதி செய்கிறது.

“இத்தனை ஆண்டுகளாக பதஞ்சலி நெய்யைப் பயன்படுத்தியவர்களின் சுகாதாரச் சீர்கேட்டிற்கு யார் பதில் கூறுவார்கள்?

உற்பத்தியாளர் (பதஞ்சலி)  தரமற்ற அல்லது கலப் படம் செய்யப்பட்ட உணவை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019இன் படி, தரமற்ற பொருளால் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புக்கு உற்பத்தியாளரே முதன்மையான பொறுப்பாளியாவார்.

உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நெய்யின் தரக்குறைவு நிரூபிக்கப்பட்ட பின்னரும், சந்தையி லிருந்து திரும்பப் பெறும் நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படாமல் போனதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

யோகா குருவும், பதஞ்சலியின் நிறுவனருமான  கருப்புப் பணப் புகழ் சாமியார் ராம்தேவ் தனது தயாரிப்புகளை ‘சுதேசி’, ’ஆரோக்கியமானது’, மற்றும் ‘பாரம்பரியமானது’  என்று கூறி விற்பனை செய்கிறார்.

சாமியார் அல்லது ஆன்மிகத் தலைவராகப் பொதுவெளியில் அறியப்படும் ஒருவர், மக்களின் நம்பிக்கை மற்றும் ஆன்மிகப் பிணைப்பை மூலதனமாகப் பயன்படுத்தி தரமற்ற, கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது பெருங் குற்றமாகும். இது ஆன்மிகத்தின் பெயரால் செய்யப்படும் கேவலமான வணிகமாகும்.

பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின்  மீது கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து மோசடிப் புகார்கள் வந்தாலும், அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இன்றுவரை ஒன்றிய அரசால் எடுக்கப்படவில்லை. மாறாக, அவரது நிறுவனத்திற்குப் பெருமளவில் மானியம், நிலம் மற்றும் சலுகைகளை ஒன்றிய அரசு வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது.

சமீபத்தில் திருப்பதிக்கு  லட்டு செய்வதற்கு உத்தரகாண்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று – 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்பட்ட நெய் கலப்படமானது என்றும், ஒரு சொட்டுப் பால் கூட சேர்க்காமல் ஆபத்தான ரசாயனங்களை வைத்து செய்யப்பட்ட வேதிக்கலவை என்றும், அவ்விதம் திருப்பி விடப்பட்ட சரக்குகளை – வேறு பெயரில் லேபிள் ஒட்டி, போலியான ஆய்வறிக்கை சான்றிதழைப் பெற்று, மீண்டும் அதே சரக்கு வாகனத்தை திருப்பதிக்கு அனுப்பியது என்பதும் சி.பி.அய். விசாரணையில் வெளிவந்தது.

இந்த நிலையில், 10 ஆண்டுகளாக பதஞ்சலி நிறுவனமும் நெய் என்ற பெயரில் வேதிப்பொருளை விற்பனைக்கு அனுப்பி உள்ளதும், எடுத்த ஆய்வறிக்கை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்ததும், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் நடப்பது மதவாத அரசு – ஆன்மிக அரசு என்று ஆகி விட்ட பிறகு, சாமியார்களின் மற்றொரு ‘சுயராஜ்ஜியம்’ கொடி கட்டிப் பறக்கத்தானே செய்யும்!

கோவை புறநகர்ப் பகுதியான வெள்ளியங்கிரிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈசா யோகா மய்யத்தை நடத்தி, கோடிக்கணக்கில் மக்கள் பணத்தைச் சுரண்டும் ஜக்கி வாசுதேவ் யானைகளின் வழித் தடத்தை ஆக்கிரமித்து, பெரும் கட்டடங்களைக் கட்டிக் கொண்டு, சாம்ராஜ்ஜியத்தை நடத்திக் கொண்டிருக்கவில்லையா?

மக்களை எளிதில் ஏமாற்றுவது சாமியார் வேடம் மூலமாகத்தானே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *