காஷ்மீர் மேனாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா பேட்டி
ஜம்மு, மே 4 – பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் 2024 மக்களவைத் தேர் தலில் பாஜகவை ஒன்றுபட்டு எதிர்ப்பது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வரு கிறார். அந்த வகையில், ஜம்மு – காஷ் மீர் மேனாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லாவையும் நேரில் சந்தித்து உரையாடினார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து, பரூக் அப்துல்லா செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சி ஒற்றுமையை உரு வாக்கிட முயற்சிகள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள், நல்ல உணர்வு மேலோங்கும் என்று நம்புகிறோம்.
காஷ்மீர் மேனாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் கூட நாடாளுமன்றத் தேர் தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க் கட்சி ஒற்றுமை ஏற்பட வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை எதிர்க்கட்சிகளும் உணர் வார்கள் என நம்புகிறேன். ஜனநாய கத்தை பாதுகாக்க இணைந்து பாடு படுவோம். 370 ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்வதன் மூலம் காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் என்றார் கள். ஆனால், அண்மையில் தீவிரவாத தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட் டனர். அவர்களுக்கு குடும்பம் இல் லையா? குண்டு துளைக்காத வாகனத் தில் அனுப்பப்பட்டார்கள். ஆனால் என்ன நடந்தது?
இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆனால், பாஜக மக்களின் உரிமையை மறுக்கிறது. ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து விட்டது.
காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர் தல் எப்போது நடைபெறும் என்று கவலை இல்லை. அதை எப்போது நடத் துவது என அவர்களே (பாஜக) முடிவு செய்யட்டும். குறைந்தபட்சம் பஞ்சா யத்து தேர்தலாவது நடக்கும் என நினைக்கிறேன். தேர்தல் எப்போது நடந் தாலும் அதில் போட்டியிட தேசிய மாநாட்டு கட்சி தயாராக உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக-வை எதிர்த்துப் போராடுவோம்.
-இவ்வாறு பரூக் அப்துல்லா கூறி யுள்ளார்.