தஞ்சை, மே 4 29.04.2023 அன்று காலை 10 மணிக்கு தஞ்சை மாதாக்கோட்டை சாலை யில் உள்ள பெரியார் படிப்பகத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133 – ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப் பட்டது.
புரட்சிக்கவிஞர் படத்திற்கு தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் மாலை அணிவித்தார்.
தொடர்ந்து, தந்தை பெரியார் சிலைக்கு மாநில ப.க.துணைத் தலைவர் கோபு.பழனி வேல் மாலை அணிவித்தார்.
கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை
இரா.ஜெயக்குமார் புரட்சிக் கவிஞர் பற்றி ஒலி முழக்கமிட்டார்.
நிகழ்வில் மாநிலகிராமப் பிரச்சார அமைப் பாளர் முனைவர் க.அன்பழகன், மாநில கலைத்துறைச் செயலாளர் தெற்குநத்தம்
ச.சித்தார்த்தன், மாநகர தலைவர் பா.நரேந் திரன், மாநில இளைஞரணி து.செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட ப.க.செயலாளர் பாவலர் பொன்னரசு, மாநகர ப.க. அமைப் பாளர் சாமி கலைச்செல்வன், தஞ்சை வடக்கு ஒன்றிய தி.க.செயலாளர் க.அரங்கராசன், மற்றும் இரா.வீரகுமார் , வீர.மகிழன், படிப்பக வாசகர்கள் பவர் வசந்தன், கார்த்திக், குழந்தைசாமி, ச.சந்தோசு, திருமானூர் பழ. பிரேம், ஓட்டுநர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.