சமூகநீதிக் கருத்துகளைப் பரப்பிய ஆங்கில நாளேடு ‘லிபரேட்டர்’ துவக்க நாள் இன்று (7.12.1942)
சமூகநீதிக் கருத்துகளைப் பரப்பிய ஆங்கில நாளேடு லிபரேட்டர் துவக்க நாள் இன்று (7.12.1942).
ஜஸ்டிஸ் கட்சியின் நிறுவனத் தூண்களில் ஒருவராக இருந்த சர்.ஏ. இராமசாமி முதலியார் அவர்களின் மூத்தமகன் பாரிஸ்டர் டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி 07.12.1942- அன்று ‘லிபரேட்டர்’ என்ற ஆங்கில நாளேட்டை ஆரம்பித்தார்.
1952-ஆம் ஆண்டு வரை அந்த நாளேடு ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கை வளர்ச்சிக்காக உழைத்தது. டாக்டர் கிருஷ்ணசாமி, பத்திரிகை உலகில் தனது தந்தையைப் போலவே சிறந்த எழுத்தாளர் என்பதை மெய்ப்பித்தார்.
டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். பாரிஸ்டர் கிருஷ்ணசாமி டில்லி நாடாளுமன்றத்தில் நுழையும்போது ‘லிபரேட்டர்’ பத்திரிகை ஆசிரியர் என்ற செல்வாக்கோடு நுழைந்து அரும்பணிகள் பல புரிந்தார்.
நீதிக்கட்சியின் கொள்கைகளைப் பரப்பவும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துகளை ஆங்கிலத்தில் கொண்டு செல்லவும் ‘லிபரேட்டர்’ இதழைப் பயன்படுத்தினார்.
திராவிடர் கழக மாநாடுகளில் டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி கலந்து கொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றுவார். அவர் கடைசியாகக் கலந்து கொண்ட நிகழ்ச்சி – திருவாரூரில் திராவிடர் கழகம் நடத்திய ஏ.டி. பன்னீர்செல்வம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியாகும். அவர் சேகரித்து வைத்திருந்த நூல்களையெல்லாம் பெரியார் நூலகம் ஆய்வகத்திற்கு அளித்தார்.
