

* ஆசிரியர் அ.சண்முகம் – சரோஜா நினைவு பெரியார் படிப்பகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி நூலகத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் திறந்து வைத்தார்.

* பெரியார் தனிப் பயிற்சி மய்யத்தை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் திறந்து வைத்தார். பெரியார் படிப்பக நினைவுக் கல்வெட்டினைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார். கழகக் கொடியினை மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஏற்றி வைத்தார்.

தந்தை பெரியார் படத்தை மேனாள் ஒன்றிய அமைச்சர் எஸ். எஸ். பழனிமாணிக்கம், அறிஞர் அண்ணா படத்தை சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன்,அன்னை மணியம்மையார் படத்தினை மாவட்ட தலைவர் வழக்குரைஞர்
சி. அமர்சிங், முத்தமிழறிஞர் கலைஞர் படத்தை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்தை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், அண்ணல் அம்பேத்கர் படத்தை மேனாள் சட்டமன்ற உறுப்பினர்
எம். இராமச்சந்திரன், கல்வி வள்ளல் காமராசர் படத்தை கே.டி மகேஷ் கிருஷ்ணசாமி, ஆசிரியர் சண்முகம் படத்தை தி.மு.க.தலைமை செயற்குழு உறுப்பினர் து. செல்வம், வழக்குரைஞர் சி.கோவிந்தராசு படத்தை தஞ்சை மேயர் சண். ராமநாதன், சித்தார்த்தன் தாயார் சரோஜா படத்தை துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தோழர் க. சசிகுமார், படத்தை கு. செல்வராசு (தி.மு.க.),தோழர் இரா. மதியழகன் படத்தை செல்வரமேஷ் (தி.மு.க.), தோழர் வீ.செந்தில்குமார் படத்தை கார்த்திகேயன்
(தி.மு.க.) ஆகியோர் திறந்து வைத்தனர். l அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளில் அம்பேத்கர் படத்திற்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
