உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் பேட்டி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஸநாதனிகளின் நோக்கம் தீபம் ஏற்றுவதல்ல! மதக் கலவரத்தை ஏற்படுத்துவதே! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு அராஜகத்தின் உச்சகட்டம்!

சென்னை, டிச.7 ஸநாதனிகளின் நோக்கம் தீபம் ஏற்றுவதல்ல! மதக் கலவரத்தை ஏற்படுத்துவதே என்றும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு அராஜகத்தின் உச்சகட்டம் என்றும் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் பேட்டியளித்தார்.

உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், ‘நக்கீரன்’ தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், சமீபத்தில் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் குறித்து விரிவாகப் பேசினார். திருப்பரங்குன்றத்தைக்
‘கலவர பூமியாக’ மாற்ற ஸநாதனிகள் முயற்சிப்பதாக அவர் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

அந்நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ள தாவது:

 வழக்கமான நடைமுறை

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுக்கணக்காக மலை உச்சியில் உள்ள உச்சி பிள்ளையார் கோயிலுக்கு நேர் மேலே உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதுதான் வழக்கம். இந்த ஆண்டும் பக்தர்கள் வழக்கம் போல இதில் கலந்துகொண்டனர்.

 சங்கிகளின் புதிய கோரிக்கை

இந்த நீண்டகால நடைமுறையை மாற்றும் நோக்கில், ஸநாதானிகள் / சங்கிகள்  சார்ந்துள்ள சில அமைப்புகள், தர்காவுக்கு (மசூதிக்கு) அருகில் உள்ள ஒரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் அவர்கள் கோரும் இடத்திற்கு நெல்லித்தோப்பு என்ற முஸ்லிம் பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதை நீதிபதி சுட்டிக் காட்டினார்

நீதிமன்ற உத்தரவும் – விமர்சனமும்!

இந்த ஸநாதான அமைப்புகள் இதற்கு முன்னரும் பலமுறை இதே கோரிக்கையை வைத்து, சென்னை உயர்நீதிமன்றத்தால் அவை நிராகரிக்கப்பட்டன.  குறிப்பாக, 2017 ஆம் ஆண்டில் நீதிபதி கல்யாணசுந்தரம் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு இதே கோரிக்கையை நிராகரித்தது. ஆனால், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், டிசம்பர் 1 ஆம் தேதி (2025) சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தில், புதிய இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார்.  மேலும், இதே நீதிபதி தான் ‘‘எச்சில் இலையில் உருளும்’’ விவகாரத்திலும் உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை மீறி எச்சில் இலையில் உருளுவதற்கு அனுமதி அளித்ததையும் குறிப்பிட்டு, புதிய இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்துப் பிறப்பித்துள்ள உத்தரவு ‘‘அராஜகத்தின் உச்சகட்டம்’’ என்று அரிபரந்தாமன் விமர்சித்தார்.

 கால தாமதமற்ற நடவடிக்கை

இந்த உத்தரவு, அரசு நிர்வாகத்திற்குக் கொடுக்கப்பட்ட போதிலும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அவர்கள் உடனடியாகச் செயல்படுத்தாத நிலையில், டிசம்பர் 3 ஆம் தேதி உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அன்றே விசாரணைக்கு வந்தது. ஒரு மாதம் அவகாசம் கொடுக்கப்பட வேண்டிய சட்டப்பூர்வ தாக்கீது (Statutory Notice) இல்லாமலேயே, நீதிபதி விரைவாக நடவடிக்கைகளை மேற்கொண்டது எந்த அடிப்படையில்?

 அதிகார துஷ்பிரயோகம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்து, வழக்குப் போட்ட ராம ரவி குமாருக்கு சி.அய்.எஸ்.எஃப். (மத்திய தொழில் பாதுகாப்புப் படை) பாதுகாப்புடன் திருப்பரங்குன்றத்துக்குச் சென்று தீபம் ஏற்ற உத்தரவிட்டதை, மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் ‘‘100 விழுக்காடு தவறு‘‘ என்றும் ‘‘அதிகார துஷ்பிரயோகம்’’ என்றும் சாடினார்.

பணியின் வரையறை

சி.அய்.எஸ்.எஃப்பின் பணி நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவது அல்ல; அது மாநிலக் காவல்துறையின் பொறுப்பு. ‘‘சி.அய்.எஸ்.எஃப் படையை அனுப்பியது சரியானதல்ல’’ என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார்.

மாநில அரசு காவல் துறையை அனுப்பாத நிலையில், சட்டம் – ஒழுங்குக்குக் குந்தகம்  ஏற்படாத நிலையில், சட்ட வழிகளைப் பின்பற்றாமல் சி.அய்.எஸ்.எஃப்அய் அனுப்பியது தவறான முன்னுதாரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசிற்குப் பாராட்டு

இந்த விவகாரத்தில், தமிழ்நாடு அரசும், கோயில் நிர்வாகமும் மிகவும் உறுதியாகவும், சரியாகவும் செயல்பட்டதாக நீதிபதி அரிபரந்தாமன் பாராட்டினார். சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பதற்கே அரசு முன்னு ரிமை கொடுத்தது

ஸநாதானிகளின் நோக்கம், கார்த்திகை தீபம் அல்ல; மாறாக, இந்து – முஸ்லிம் கலவரத்தை உண்டாக்குவதாகும். திருப்ப ரங்குன்றத்தைத் ‘‘தென்னிந்தியாவின் அயோத்தியாக’’ மாற்றுவது என்ற முழக்கத்துடன் ஹிந்துத்துவாவினர் பிரச்சா ரம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக, சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவது அரசின் மிக முக்கியமான கடமை என்றும், ஒரு நீதிபதி உணர்ச்சிப்பூர்வமான வழக்குகளில் அவசர அவசரமாக உத்தரவுகளைப் பிறப்பிப்பது, நாட்டை ஒரு கலவர பூமியாக மாற்றுவதற்கே வழிவகுக்கும் என்றும் நீதிபதி அரிபரந்தாமன் தனது நேர்காணலில் அழுத்தமாகக் கருத்துத் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *