மனிதன் என்று ஒருவன் இருப்பா னேயானால், அவன் முன் மற்றொரு மனிதன் கஷ்டப்படுவதைப் பார்த்தால், எவனும் பரிதாபப்பட்டுத்தான் தீருவான். சகிக்க முடியாத கஷ்டம் வந்து விட்டால், அவனுக்குப் பாபமோ, நரகமோ, சட்டமோ, நீதியோ, பழக்கமோ வழக்கமோ ஒன்றும் எதிரில் இருக்க முடியாது.
(குடிஅரசு 5.2.1933)