சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று (3.5.2023) செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகையாளர்கள் தங்கள் துறை சார்ந்த தொழிற்தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கும், திறன்மேம்பாட்டை அதிகரிக்கவும், மொழித்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கவும் “பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு பயிற்சியினை” செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன், நீதியரசர் கே.சந்துரு (ஓய்வு), மேனாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ் இணைய கல்விக் கழக இணை இயக்குநர்ரெ.கோமகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
Leave a Comment