கடவுள் என்பவர் இல்லை என்றும், விஞ்ஞான விதிகளே இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றன என்றும் தனது இறுதிப் புத்தகமான Brief Answers to the Big Questions உட்படப் பலமுறை தெளிவாகக் கூறியுள்ளார்.
“கடவுள் என்று கூறுவதன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் அதன் பெயரைக் கூறிக்கொண்டு வருபவர்கள் மீதுதான் அச்சமாக உள்ளது.”
இது, மத நம்பிக்கைகளை விட, மதத்தின் பெயரால் மனிதர்கள் ஏற்படுத்தும் வன்முறை மற்றும் பிரிவினைகள் மீது அவருக்கு இருந்த கவலையை வெளிப்படுத்துகிறது. கடவுள் குறித்த கருத்துகளை அவர் நிராகரித்தாலும், மதத்தின் சமூக மற்றும் அரசியல் தாக்கங்கள் குறித்து அவருக்கு விமர்சனமும் அச்சமும் இருந்தது.
