கடுமையான குளிரில் சாலை ஓரம் பூங்கா மற்றும் ரயில் நிலையங்களில் உறங்கும் இவர்கள் கைவிடப்பட்டவர்கள் தாம்!
ஆம், அரசின் எந்தச் சலுகையும் கிடைக்காமல் செய்யப்பட்டவர்கள். இவர்கள் அரசு சாதனங்கள் தங்கள் தனியுரிமையைப் பாதிக்கும் என்று கூறி அதனை ஏற்க மறுத்தவர்கள். அதனால் அவர்களின் அனைத்துச் சலுகைகளும் பறிக்கப்பட்டன. இவர்களால் பொருள்கள் கூட வாங்க இயலாது. சீனாவில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் சீனப் பணமான யுவானை வாங்குவதை நிறுத்திவிட்டன. நீங்கள் டிஜிட்டல் பணப் பறிமாற்றம் மட்டுமே செய்ய முடியும்.
இந்தியாவிலும் பெரும்பாலான மருத்துவமனைகள் கேஷ்லெஸ் (ரூபாய் தாள் இல்லா பறிமாற்றம்) அதாவது டிஜிட்டல் வழியில் மட்டுமே கட்டணத்தைப் பெறுகின்றனர்.
அரசு உங்கள் நடவடிக்கையைக் கவனித்து நீங்கள் அரசுக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்றால் உங்களின் அனைத்துத் தொடர்பு சாதனங்களையும் முடக்கி விடும். விளைவு? நீங்கள் தண்ணீர் குடிக்க குடிநீர் குழாயில் கூட போய் நீர் அருந்த முடியாது. ஸ்காண்டிநேவியன் நாடுகளில் சில இடங்களில் வெதுவெதுப்பான குடிநீரைக் குடிக்க உங்கள் முகத்தை அங்குள்ள திரையில் காட்டவேண்டும் அதன் பிறகுதான் குடிநீர் வரும்.
இந்த நிலை இந்தியாவில் வந்தால் அரசை எதிர்க்கும் எவரும் தண்ணீர்கூட குடிக்க முடியாத நிலை உருவாகிவிடும்.
