வெட்டிக்காடு, டிச.6– 20.11.2025 அன்று வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி யில் குழந்தைகள் தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் முன்னிலை வகுக்க, அனைத்து ஆசிரியப் பெருமக்களும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களை மகிழ்வித்தனர்.
இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களின் அறிவுத் திறன் மேம்பாட்டிற்கு உத வும் வகையிலும், பகுத்தறிவுச் சிந்தனையுடன் செயல் படுவதற்கு இணக்க மாகவும் நாடகங்கள், பாடல்கள், பல்சுவை நிகழ்ச்சிகள், வினாடி வினா, நடனம் போன்றவற்றை நிகழ்த்திக் காட்டி மாணவர்களுக்குப் பயன்பெறும் வகையில் விழாவினை நிகழ்த்திக் காட்டினர்.
தமிழ் மொழியில் மாணவர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் கருத்துரை வழங்கி தமிழாசிரியர்கள் சிறப்பித்தனர். ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் நிகழ்ச்சிகளை நடத்தி காட்டி மாணவர்களை மகிழ்ச்சி அடையச் செய்த னர். விழாவானது தமிழ்த் தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கி நாட்டுப் பண்ணுடன் சிறப்புடன் முடிவுற்றது.
