சிதம்பரம், டிச. 6– தந்தை பெரியார் படிப்பக செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் கோவி.சுந்தரமூர்த்தியின் படத்திறப்பு 02.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு, வாணியர் தெருவில் சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கோவி.பெரியார்தாசன் அறிமுக உரையாற்றினார்.
மாவட்ட காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம் படத்தினை திறந்துவைத்து உரையாற்றினார். படிப்பக துணைத்தலைவர் ஆறு.கலைச்செல்வன் வரவேற்புரையாற்றினார்.
சிதம்பரம் மேனாள் நகர் மன்றத் தலைவரும் அனைந்திந்திய அண்ணா தி.மு.க. மாவட்ட அவைத் தலைவருமான எம்.எஸ்.என்.குமார், மேனாள் தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர், சிவா. கண்ணதாசன், சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் மு.சா., பெரியார் படிப்பக பொருளாளர் நீதிராசன், நகர கழக தலைவர் கோவி. குணசேகரன், வடலூர் நகர கழக தலைவர் புலவர் சு.இராவணன், ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் ப.முருகன், குமராட்சி ஒன்றிய தலைவர் வை.அர்ச்சுனன், முருகேசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவி.சுந்தரமூர்த்தியின் மகன் சு.வீீரமணி நன்றியுரை யாற்றினார்.
