சென்னை, டிச.6– கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்றிய சங்பரிவார் கும்பல் மீது சட்ட ரீதியான நடவ டிக்கையும், தகுதியற்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் பல்வேறு இடங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை பாரிமுனை யில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு, திருப்பரங் குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மதச் சார்பின்மைக்கு எதிராக செயல்படும் நீதிபதி சுவாமிநாதனை கண்டித்து முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், நீதிபதி சுவாமிநாதன் இதுவரை அளித்த பல்வேறு தீர்ப்புகள், நீதிமன்ற மாண்பை அவமதிக்கும் விதமாக அமைந்திருப்பதாக குற்றச் சாட்டினார்.
நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் கடிதம் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேபோல், சென்னைஅசோக்நகர் தபால்நிலையம் அருகே நீதிபதி சுவாமி நாதனை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் தென்சென்னை மாவட்ட செயலாளர் சிவா தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ் நாடு அமைதியான மாநிலம். இந்தியாவிற்கு முன்மாதிரியான மாநிலத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்த பாஜக, ஆர்எஸ்எஸ் முயற்சி செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். வடமாநிலங்களில் செய்வது போல வன்முறை அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள், தென் மாநிலங்களில்பா.ஜ.க. கொள்கை எடுபடவில்லை என்று அவர்கள் முழக்க மிட்டனர்.
