அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் இன்று (6.12.1956)
இன்று பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் (6.12.1956).
அம்பேத்கர் அவர்கள் தமது எழுத்துக்களிலும், உரைகளிலும் தந்தை பெரியாரின் ‘வைக்கம்’ போராட்டத்தின் வெற்றியைப் பிற்காலத்தில் நினைவு கூர்ந்து, அதுவே ‘மகத்’ போராட்டத்தை நடத்துவதற்குத் தனக்கு ஒரு தூண்டுதலாகவும், உந்துசக்தியாகவும் அமைந்தது என்று அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எழுதியது சமூக நீதிக் களத்தில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
கோயில் தெருக்களில் நடமாடும் உரிமைக்காக கேரளா சென்று களமிரங்கி சட்ட ரீதியாகவும், மக்கள் எழுச்சியுடனும் தந்தை பெரியார் நடத்திய போராட்டமாக ‘வைக்கம்’ அமைந்தது.
இதுபோன்ற ஒரு மக்கள் திரள் போராட்டத்தை நடத்த முடியும் என்பதற்கான உறுதியான ஒரு முன்மாதிரியை வைக்கம் போராட்டத்தின் வெற்றி அம்பேத்கருக்கு வழங்கியது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பொதுவெளியில் உரிமை கோருவது, குறிப்பாக தீண்டாமைத் தடைகளை உடைப்பது என்ற போராட்ட வடிவத்தை தந்தை பெரியார் வைக்கத்தில் வெற்றிகரமாக நடத்திக் காட்டியதை. 20.03.1927 அன்று ‘மகத்’ குளத்தில் குடிநீர் பருகும் உரிமையைக் மீட்க தூண்டியது.
ஒரு குறிப்பிட்ட உரிமையைக் கோரித் தொடர்ச்சியாக மக்களைத் திரட்டிப் போராடினால் வெற்றியை அடைய முடியும் என்ற நடைமுறைப் பாடத்தை அம்பேத்கர் தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தின் மூலம் உள்வாங்கினார்.
தந்தை பெரியாரின் அடிச்சுவடை வடக்கே பல போராட்டங்களில் அண்ணல் அம்பேத்கர் கடைப்பிடித்தார்.
இரண்டு பெருந்தலைவர்களின் போராட்டங் களும் வன்முறைகளோ எதுவுமே இல்லாமல் இருவருமே மக்களை ஒருங்கிணைத்து கொண்டு சென்ற விதம் உலகில் அனைத்துப் போராட்டத்திற்கும் எடுத்துக்காட்டு ஆகும்.
