காலை உணவு திட்ட விரிவாக்கம்: முதலமைச்சர் ஆலோசனை

Viduthalai
2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, மே 5 தமிழ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் விரி வாக்கப் பணிகள் தொடர் பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துறை அதிகாரி களுடன் நேற்று (4.5.2023) ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக் கப் பள்ளி களில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கில் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆ-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.

முதல்கட்டமாக தமிழ் நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல் பட்டு வரும் 1,545 தொடக் கப் பள்ளிகளில், ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில், காலையில் உப் புமா, கிச்சடி உள்ளிட்ட பல் வேறு வகை சிற் றுண்டிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் படுகின்றன.

இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட் டம் அமல்படுத்தப்பட்டுள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவு அதிகரித்துள்ளது தெரிய வந்தது. 

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள 30,122 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 1 முதல் 5ஆ-ம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

இதற்காக கடந்த நிதிநிலை அறிக் கையில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட் டது. மேலும், திட்டத்துக் கான வழி முறைகளும் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டன.

அதில், திட்டத்தின் பணிகளைக் கண்காணிக்க, வட்டார வள மய்ய அள வில் ஒரு ஆசிரியப் பயிற்று நரை பொறுப்பு அலுவல ராக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து, மாவட்டம் வாரியாக திட் டத்தின் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், காலை உணவுத் திட்டத்தின் விரி வாக்கம் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், தலை மைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறைச் செயலர் நா.முருகானந் தம், காலை உணவுத் திட்ட ஒருங் கிணைப்பாளர் க.இளம் பகவத் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், காலை உணவுத் திட்டத் தின் விரிவாக்கப் பணி கள், தேவையான உணவுப்  பொருட்களைக் கொள் முதல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப் பட்டன.

மேலும், இந்த திட் டத்துக்கான முன்னேற் பாட்டுப் பணிகளை துரிதமாக முடித்து, ஜூன் மாதத்தில் காலை உணவுத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *