சென்னை, மே 5 தமிழ்நாட்டில் நீரிழிவு, ஊட்டச் சத்து மற்றும் வளர் சிதை மாற்ற பிரிவில் எம்டி படிப்பை வரும் கல்வி ஆண்டி லேயே தொடங்க அனு மதி அளிக்க கோரி ஒன் றிய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அரசின் சுகா தாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில்தான் அதிக அளவில் நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். அந்தவகை யில், 7.7 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நீரிழிவு நோயின் பாதிப்பு சுமார் 10.4 சதவீதமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் தங்கள் சுகாதாரக் கொள்கைகளில் நீரிழிவு போன்ற தொற் றாத நோய்களைக் கண் டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.
எனவே, நீரிழிவு நோய் தொடர்பான எம்.டி. (நீரிழிவு, ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற் றம்) படிப்பைத் தொடங் குவதன் மூலம், நாட்டில் இந்தச் சிறப்புத் துறையில் சுகாதார வல்லுநர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.
அதேபோல், நாட்டி லுள்ள அனைத்து சுகா தார மய்யங்களிலும், மாநில மற்றும் ஒன்றிய அரசின், நீரிழிவு சிகிச்சை பிரிவுகளை உருவாக்கும் கொள்கையை வெற்றி கரமாக செயல்படுத்தவும் முடியும். மேலும், தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட புற மருத்துவமனைகளிலும் நீரிழிவு சிகிச்சை பிரிவு களை உருவாக்கவும் இது உதவும். சென்னை மருத் துவக் கல்லூரியில் 1986-ஆம் ஆண்டு முழுநேர
2 ஆண்டு நீரிழிவு டிப் ளமோ படிப்பு தொடங்கப் பட்டது.
எனவே, எம்.டி. (நீரி ழிவு, ஊட்டச்சத்து மற் றும் வளர்சிதை மாற்றம்) பாடத்திட்டத்தை உரு வாக்குவதால், ஏற்கெ னவே உள்ள நீரிழிவு மருத்துவத்தில் உள்ள டிப்ளமோ இருக்கை களை பட்டப்படிப்பு இடங்களாக மாற்றலாம். இதனால் தேசிய மருத் துவ ஆணைய விதிகளின் படி, இந்த சிறப்புப் பிரி வில் அதிக எண் ணிக்கையிலான பேராசிரியர்கள் உருவாகுவர்.
எம்.டி. (நீரிழிவு, ஊட் டச்சத்து மற்றும் வளர் சிதை மாற்றம்) பாடத் திட்டத்தை முது நிலை மருத்துவக் கல்வி விதி முறைகள் (றிநிவிணிஸி, 2000) அட்ட வணையில் தேசிய மருத்துவ ஆணையம் சேர்த்தால், தற்போதுள்ள நீரிழிவு மருத்துவத்தில் டிப்ளமோ இருக்கைகள் எம்.டி. பட்டப்படிப்பு இடங்களாக மாற்றப்பட லாம்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் இப்படிப்பை தொடங்குவதற்கு, தமிழ் நாடு அரசு, தேசிய மருத் துவ ஆணையத்துக்கு ஒரு கருத்துருவை அனுப்பி தேவையான உத்தரவு களை பிறப்பிக்க கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், இதனை தேசிய மருத்துவ ஆணை யம் ஏற்கவில்லை.
இதையடுத்து, தேசிய மருத்துவ ஆணையத்தி டம் தேவையான உத்தர வுகளை பிறப்பிக்குமாறு தமிழக அரசு மேல்முறை யீடு செய்துள்ளது. எனவே, வரும் கல்வியாண்டி லேயே இப்படிப்பை தொடங்குவதற்கு தேவை யான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.