எந்தையார் ஒளவை நடராசன் போற்றிய
ஆசிரியர் திலகத்தின்
93 ஆம் பிறந்த நாள் (2.12.2025)
பெருமிதம் நாளும் வெல்க !
பிறந்த நாள் தொட்டே பகுத்தறிவுப் பிடிப்போடு
தந்தை பெரியார்
ஆரத்தழுவிய அருமந்த மகனாக வளர்ந்து
நாளும் உயர்ந்து
தன்மான இயக்கத்தையும்,
திராவிடர் கழகத்தையும்
கண் போலக் காப்பவர்
தலைவர் வீரமணி.
அல்லும் பகலும் அயராமல்
இனமான எழுச்சி உரைகளையும்,
நிகரில்லாக் கல்விப் பணிகளையும் ஆற்றி
இருண்டு கிடக்கும் திராவிட சமுதாயத்தை
அங்குலம் அங்குலமாக உயர்த்தி வருபவர் ..
ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் .
‘‘இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்’’
என்ற திருக்குறள் வாழ்வு
ஆசிரியர் திலகத்தின்
பெருமித வாழ்வு !
பல்லாண்டு வாழ்க !!
வாழ்க தமிழ் – வெல்க பெரியாரியம் .
– ஔவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு
