ஹிந்துக்களே… பாஜகவிடம் கேளுங்கள்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒரு பிஜேபி காரனோ, ஒரு இந்து முன்னணிக் காரனோ.. வாங்க இந்துக்களோட உரிமையை மீட்போம்னு கூப்பிட்டானுங்கன்னா..

மருத்துவம் படிக்க நீட் கொண்டு வந்ததுனால எங்க புள்ளைங்க எல்லாம் டாக்டராக முடியல.. அத நீக்குறியானு கேளுங்க..

நாடு முழுக்க அய்அய்டி இருக்கு.. ஆனா, அதுல 10% கூட எங்க புள்ளைங்களுக்கு சீட்டு கிடைக்க மாட் டேங்குது.. அதுக்காக போராட வருவியானு கேளுங்க..

இ.டபுள்யூ.எஸ். (EWS) 10% கொண்டு வந்ததுனால, எல்லா போஸ்ட்டிங்க்லயும் கம்மி மார்க் கொடுத்து, ஒரு குரூப்பை மட்டும் உள்ள அனுப்பிட்டு இருக்காங்க.. அதை உன்னால தடுக்க முடியுமானு கேளுங்க..

நாடு முழுவதும் இருக்க நீதிமன்றத்துல ஒரு குரூப் மட்டுமே நீதிபதியா இருக்காங்க.. மத்த இந்துக்களும்
சரி சமமா நீதிபதியாக்க போராட வருவியானு கேளுங்க..

தமிழ்நாட்டுல இருக்க  பி.சி., எம்.பி.சி., எஸ்.சி.,
எஸ்.டி.  இட ஒதுக்கீடு 69% குறைக்கணும்னு இன்னும் ஒரு குரூப்பு ட்ரை பண்ணிட்டே இருக்கானுங்க.. அவனுங்கள எதிர்த்து குரல் குடுப்பியானு கேளுங்க..

தமிழ்நாடு அறநிலையத்துறை பணத்துல இருந்து ஸ்கூல், காலேஜ் எல்லாம் கட்டக் கூடாதுனு ஒரு குரூப் போராடிகிட்டு இருக்கானுங்க.. அவனுங்கள உன்னால எதிர்க்க முடியுமானு கேளுங்க..

மதுரையில எய்ம்ஸ் வரும்னு ஒத்த செங்கல்ல வச்சிட்டு போனாரே ஒருத்தரு.. அவர சீக்கிரமா எய்ம்ஸ் கட்டித்தரச் சொல்லி போராட வருவியானு கேளுங்க..

புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்து எங்க குழந்தைங்கள எல்லாம் மூணாவது, அஞ்சாவது, எட்டாவதோட கழிச்சுக் கட்ட திட்டம் போடுறாங்களே, அவங்களுக்கு எதிரா பேசுவியானு கேளுங்க..

இருக்க தொழிலாளர் சட்டத்தை எல்லாம் திருத்தி, 8 மணி நேரமா இருக்கத 12 மணி நேரமா மாத்தி, ஒரு தொழிலாளியை சுரண்டிக்கலாம்னு பர்மிஷன் குடுக்குறாங்களே, அத கண்டிச்சு குரல் குடுப்பியானு கேளுங்க..

ஏன்னா, இதெல்லாம் தான் இந்துக்களுக்கு தேவையான உரிமை.. நம்ம வழிபாட்டு உரிமையை எல்லாம் யாரும் எதுவும் பண்ண முடியாது.. இவனுங்களுக்கு பின்னாடி இருக்க அஜெண்டாவே, நம்மகிட்ட சாமியை காட்டிட்டு நாம அனிபவிச்சிட்ருக்க எல்லா உரிமையும் பறிச்சு நம்மள படிக்க விடாம பண்றது மட்டும் தான்.

அதனால, மக்களாகிய நாம் இந்த இந்துத்துவ அஜெண்டா கும்பலிடம் ஜாக்கிரதையாக இருப்போம்.. நமக்கான உண்மையான உரிமை என்னென்ன என்று விழிப்புணர்வுடன் இருப்போம்!!

– பா.பிரேம், முகநூல் பதிவு

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *