காஞ்சிபுரம் அருகே 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய சதிக்கல் சிற்பம் கண்டெடுப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

காஞ்சிபுரம், டிச.5 காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை வேகவதி ஆற்றுப்பாலம் அருகேயுள்ள திருவள்ளுவர் தெருவில், சுமார் கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அரிய சதிக்கல் சிற்பம் (2.12.2025) அன்று வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

சதிக்கல் சிற்பம்

காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் சு. உமாசங்கர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் மு. அன்பழகன் ஆகியோர் ஓரிருக்கை பகுதியில் வேகவதி ஆற்றின் கரையில் கள ஆய்வு மேற்கொண்டிருந்தபோது, இந்தக் குறிப்பிடத்தக்க சதிக்கல் சிற்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சதிக்கல் சிற்பம், நடுகல் வகையைச் சேர்ந்தது.

இதில் ஒரு வீரன் அவனது இரு மனைவிகளுடன் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளனர். நடுவில் நிற்கும் ஆண் சிற்பம் மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் நேராக நிற்கிறது. வலது கை தடிமனான கூரிய வாள் ஒன்றினை உயர்த்திப் பிடித்திருக்கிறது. இடது கை இடது தொடையின் மீது வைக்கப்பட்டுள்ளது.

 தலை அலங்காரம்

முகத்தில் முறுக்கிய மீசை மற்றும் ஒழுங்கு செய்யப்பட்ட தாடி காணப்படுகிறது. நன்கு சீவப்பட்ட தலைமுடியும், இடப்பக்கமாக உள்ள கொண்டையும் மெல்லிய துணியால் இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்தத் தலைமுடி மற்றும் கொண்டை அமைப்பு, இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட சதிக்கல் சிற்பங்களில் காணப்படாத ஒரு தனித்துவமான அம்சமாகும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வீரனின் வலப்பக்கமும் இடப்பக்கமும் பெண்கள் நிற்கின்றனர். வலப்பக்கப் பெண்: வலது கை தொங்கவிடப்பட்டிருக்க, இடது கை மலர் மொட்டு ஒன்றை உயர்த்திப் பிடித்துள்ளது.  இடப்பக்கப் பெண்: வலது கையில் மலர் மொட்டு ஒன்றை வயிற்றின் முன்பகுதியில் வைத்திருக்க, இடது கை ஒரு குடுவை ஒன்றைப் பிடித்துள்ளது.

இரு பெண்களுக்கும் வலது பக்கக் கொண்டை காணப்படுகிறது. மூவரின் கை, தோள்பட்டை, கழுத்து மற்றும் மார்புப் பகுதிகளில் அணிகலன்கள் செதுக்கப்பட்டுள்ளன. காதுகளில் வட்ட வடிவிலான மிகத் தடிமனான காதணிகள் உள்ளன. மூவரும் இடைப்பகுதியிலிருந்து கால் மணிக்கட்டு வரையில் பட்டாடை அணிந்துள்ளனர். இந்தச் சிற்பங்கள் சில இடங்களில் சிதைந்துள்ளன. மூவரின் முகங்களும் மிகவும் மழுங்கிய நிலையில் காணப்படுகின்றன.

கல்வெட்டு எழுத்துக்கள் எதுவும் இல்லாத இந்தச் சதிக்கல் சிற்பத்தின் காலம், அதன் கலை மற்றும் வடிவமைப்பு அம்சங்களைக் கொண்டு, கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் உமாசங்கர் மற்றும் அன்பழகன் தெரிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *