உங்களது வாழ்த்துகள் எனக்குரிய காப்பீடு ஆகப் பயன்படும்! ‘‘பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்’’ என்ற பணியே இறுதி மூச்சடங்கும்வரை! எனது தலைதாழ்ந்த நன்றி! ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உங்களது வாழ்த்துகள் எனக்குரிய ‘‘காப்பீடு’’ ஆகப் பயன்படும்! ‘‘பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்’’  என்ற பணியே இறுதி மூச்சடங்கும்வரை தொடரும் என்றும், பிறந்த நாள் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் எனது தலை தாழ்ந்த நன்றியும், வணக்கமும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது நன்றி அறிக்கை வருமாறு:

அனைவர் நெஞ்சிலும்
நிரந்தர இடம்பெற்றுள்ள முதலமைச்சர்!

எனது (டிச.2) 93 ஆம் ஆண்டு பிறந்த நாளுக்காக, இல்லத்திற்கு வந்து தனது பாசத்திற்குரிய வாழ்த்துகளை – வழமை தவறாது வந்து – தந்து, ஊக்கப்படுத்தி, உழைப்பை மேலும் பெருக்கிட வழிவகை செய்த நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் நாயகரான மானமிகு மாண்புமிகு முதலமைச்சரும், நமது அனைவர் நெஞ்சிலும் நிரந்தர இடம்பெற்றுள்ளவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்,

‘அறிவுத் திருவிழா’ நாயகர்!

அதேபோல, பெரியார் திடலில் காலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கடமையாற்றிடும் நமக்கு மேலும் உற்சாகத்தைப் பெருக்கி, பகுத்தறிவுக் கொள்கையாளராக, வீரத் தளபதியாக விளங்கும் ஆற்றல்மிகு ஊருணி துணை முதலமைச்சரும், துவளா இளைஞரணியின் தள நாயகனுமான ‘‘பெரியாரின் பெயரனாக’’ தன்னை அகிலத்திற்கும் அச்சமின்றி அறிமுகப்படுத்துவதில் ஆர்வத்துடன் கொள்கை முழக்கம் செய்யும் எமது அடுத்த தலைமுறையின் ‘அறிவுத் திருவிழா’ நாயகர் மானமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கலையுலகத் தோழர்கள், இலக்கியச் செறிவாளர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சான்றோர் பெருமக்கள், பேச்சாளர்கள் ஆகியோருக்கும்,

எனது அங்கங்களான கொள்கைச் சிங்கங்கள்!

முதல் நாள், இரண்டாம் நாள்

மாலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கொள்கையை முழங்கிய கருத்தாளர்கள், கவிஞர்கள், குறிப்பாக கவிப்பேரரசு, கவிச்சுடர், மேனாள் நீதியரசர்கள், எனது அங்கங்களான கொள்கைச் சிங்கங்கள், அன்பும் பரிவும் பொழியும் மகளிர் தோழர்கள், மாற்றுத் திறனாளிகள், கொள்கை மாறா லட்சிய வீரர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தோழர்கள், உலகெங்கும் உள்ள குருதி மற்றும் கொள்கை உறவுகள் அனைவருக்கும் எனது தலைதாழ்ந்த நன்றியும், வணக்கமும்!

உங்களது வாழ்த்துகள் எனக்குரிய ‘‘நல்ல காப்பீடு’’ ஆகப் பயன்படும்.

‘‘பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்’’  என்ற பணியே இறுதி மூச்சடங்கும்வரை தொடரும்!

ஈரோட்டுப் பாதை சென்றவர்களுக்குப்
பாராட்டு முக்கியமல்ல!

இடையில், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசின் வெற்றிக் களத்திற்குச்  ‘சென்ட்ரி டூட்டி’யை சளைக்காமல், களைப்பு இல்லாமல் முதன்மைப் பணியாக மேற்கொள்வோம்!

ஈரோட்டுப் பாதை சென்றவர்களுக்குப் பாராட்டு முக்கியமல்ல என்றாலும், ஊக்கம், உள்ளத்தை இளமையாக்கும் அல்லவா!

வயது குறையவில்லை; மறைந்துவிட்டது!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

4.12.2025

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *