வெட்டிக்காடு, டிச.4- 02.12.2025 அன்று பெரியார் கல்வி குழுமத்தின் இயக்குநரும் திராவிட கழகத்தின் தலைவருமான மானமிகு ஆசிரியர் அய்யா அவர்களின் 93ஆவது ஆண்டு பிறந்த நாளை ஒட்டி பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வெட்டிக்காடு மாணவர்கள் 2.12.2025 அன்று காலை நடைபெற்ற வழிப்பாட்டு கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிமுறைகள் மற்றும் செயல்பாடுகளை மாணவர் களுக்கு தெரிவித்து ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்து கூற முதல்வர் கேட்டுக்கொண்டதன் அடிப் படையில் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், ஓட்டுநர், நடத்துனர் உட்பட அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி தமது வாழ்த்துகளை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
அய்யா அவர்களுக்கு முழுமையான ஆரோக்கியத்துடன் மேலும் பல்லாண்டுகள் வாழ்ந்து அவர்களின் பணி சிறக்கவும் அய்யாவின் வழிகாட்டுதல் தொடரவும் வெட்டிக்காடு பள்ளியில் உள்ள அனைவரும் மனமாற வாழ்த்துகிறோம் . முதல்வர் அனைவருக்கும் கூடை கேக் வழங்கிட அய்யாவின் பிறந்த நாள் விழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது.
