ஜெயங்கொண்டம், டிச.4- ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உண்மை, துணிவு, மனித நேயம் மூன்றையும் வாழ்வாக மாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவின் துவக்கமாக முதல்வர்அவர்கள் தன் உரையில்,
“சமூகம் முன்னேற வழிகாட்டிய உயர்ந்த சிந்தனையாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள், மாணவர்களுக்கு மனித நேயம் மற்றும் சமத்துவம் பற்றி புரிய வைக்கும் சிறந்த நாள்” எனவும் “அறிவு – மனிதநேயம் – சமத்துவம்” என்ற மூன்று கொள்கைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி நடைபெற்றது.
ஆசிரியரின் சாதனை களையும், இயற்றிய நூல்களையும் அதன் பயன்களையும் அழகாக விளக்கி கூறினர்.
அவர் பெற்ற விருதுகளை பெருமிதத் துடன் எடுத்துரைத்தனர். பிறந்த நாள் கவிதையை அழகாக வாசித்தனர். எல்கேஜி மழலையர்கள் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்
இந்த நிகழ்வு, மாணவர்களின் மனதில் உண்மை, ஒழுக்கம், சமத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பதியச்செய்த ஒரு அரிய நாளாக அமைந்தது.
பள்ளியின் முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்தனர்.
