* மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பே. மாரிஅய்யாவின் மகனும் கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான மா. தமிழ் அய்யா தமிழர் தலைவரை சந்தித்து ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கினார்.
* வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு மாதந்தோறும் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்த மாதத்திற்கான நன்கொடை ரூ.15,500 தொகையை தமிழர் தலைவரிடம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதிபாண்டியன், மாவட்ட செயலாளர் புரசை அன்புச்செல்வன், கொடுங்கையூர் தே.செ. கோபால், தங்கதனலட்சுமி, பசும்பொன், மரகதமணி, பார்த்திபன் ஆகியோர் வழங்கினர். * ஏ. சுகுமாரன், பாரதி ஆகியோர் இயக்க நிதியாக ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: மருத்துவர் கவுதமன். (சென்னை 2.12.2025)
![தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாள் - அமைச்சர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து [சென்னை, 2.12.2025] திராவிடர் கழகம், நன்கொடை](https://viduthalai.in/wp-content/uploads/2025/12/2-6-scaled.jpg)
* செய்யாறு மாவட்ட தலைவர் அ.இளங்கோவன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு ‘விடுதலை’ வளர்ச்சி நிதியாக ரூ.9,300/- வழங்கினார். (சென்னை, 1.12.2025). * மகப்பேறு மருத்துவ நிபுணர் தமிழ்மணி ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: மருத்துவர்கள் அருமைக்கண்ணு, ராஜசேகரன்.
யூ டூ ப்ரூட்டஸ் மைனர், ஓவியர் சத்தியசீலன் கங்காசலம், பாட்டர் ரவுத்திரா, கலை அய்யனார் ஆகியோர் தந்தை பெரியார் பட ஓவியத்தை தமிழர் தலைவருக்கு வழங்கி பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். உடன்: சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்
