சென்னை, டிச.4- புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 750 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது.
கனமழையால் நீர் வரத்து அதிகரித்ததால் புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், புழல் ஏரிக்கான நீர் வரத்து 2,930 கன அடியில் இருந்து 4,460 ஆக அதிகரித்துள்ளது. இதனால், நீர் இருப்பு 3,168 மில்லியன் கன அடியாக உள்ளது.
புழல் ஏரியில் இருந்து 1500 கனஅடி நீர் திறக்கப்படுவதால் தாழ்வான பகுதிகளில் வசிப் போர் பாதுகாப்பாக இருக்க அறிவு றுத்தப்பட்டுள்ளது.
புழல் ஏரியில் இருந்து கால்வாய் வழியாக உபரி நீர் திறக்கப்பட் டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
