பெரியார் திடல்
சென்றிருந்தேன்
ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின்
93ஆம் பிறந்தநாள் விழாவில்
கலந்துகொண்டேன்
‘இந்த நூற்றாண்டு கண்டதுண்டா
இப்படி ஓர் இயக்கத்தை’
என்று அவர் எழுதிய நூலை
வெளியிட்டேன்
பெரியார் உலகத்துக்கு
எனது எளிய கொடையாக
ஒருலட்ச ரூபாய் வழங்கினேன்
“காலம் கருணைமிக்கது;
தமிழர்களுக்கு அது
நன்மையே செய்திருக்கிறது
அறிஞர் அண்ணா மறைந்தார்;
ஒரு வெற்றிடம் உருவானது.
வெற்றிடத்தைக் காற்று
நிரப்பும் என்பது விதி;
கலைஞர் காற்றாக வந்து
நிரப்பினார்
பெரியார் மறைந்தார்;
ஒரு வெற்றிடம் உண்டானது.
ஆசிரியர் வீரமணி
காற்றாக வந்து நிரப்பினார்
கலைஞர் இல்லையென்றால்
பெரியார் கண்ட ஆட்சி
இருந்திருக்காது;
வீரமணி இல்லையென்றால்
பெரியாருக்கு இத்துணை நீட்சி
இருந்திருக்காது
நூறாண்டு வாழ்க என்று
அவரைக் குறைவாக
வாழ்த்தக்கூடாது.
நீங்கள் விரும்பும்வரை வாழ்க”
என்று வாழ்த்திப் பேசினேன்
நிறைவுரையில்
ஆசிரியர் வீரமணி
சிம்ம கர்ஜனை செய்துவிட்டார்
வெளியே மழை
உள்ளே புயல்!
உடன்: முன்னாள் நீதியரசர் ஏ.கே.ராஜன், கவிஞர் கலி.பூங்குன்றன், தொல்லியல் அறிஞர்
ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப(ஓய்வு)
