* வாழ்க வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
* வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!
* வாழ்க வாழ்கவே
தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்கவே!
* காப்போம் காப்போம்!
அரசியலமைப்புச் சட்டம் வழங்கும்
மாநில உரிமைகளைக் காப்போம்!
* கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்
ஆளுநர் ரவியை கண்டிக்கிறோம்!
* தமிழ்நாட்டையும் தமிழர்களையும்
இழிவுபடுத்தும் ஆர்.என்.ரவியைக்
கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்!
* சிதைக்காதே சிதைக்காதே
நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்காதே!
* ஒரிசாவிலும் பீகாரிலும்
தமிழர்களை இழிவுபடுத்தி
ஒற்றுமையைக் குலைப்பவர் பிரதமரா?
* தமிழ்நாட்டின் வரிப் பணத்தில்
சம்பளத்தை வாங்கிக் கொண்டு
தமிழ்நாட்டை இழிவுபடுத்தும்
ஆர்.என்.ரவி ஆளுநரா?
* ஆபத்து! ஆபத்து!
ஆர்.எஸ்.எஸ்.சால் ஆபத்து!
இந்தியாவின் ஒற்றுமைக்கு
ஆர்.எஸ்.எஸ்.- சங் பரிவாரால்
பா.ஜ.க.வால் ஆபத்து!
* மதக் கலவரங்களை நாட்டில் தூண்டி
பயங்கரவாதத்தை வளர்ப்பது யார்?
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க!
* மணிப்பூர் கலவரம் தொடரும்போதும்
மக்களைப் பார்க்காத பிரதமர் யார்?
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.!
* ஷாகாக்கள் என்னும் பெயரால்
வன்முறைப் பயிற்சிகள் தருவது யார்?
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.!
* மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால்
மக்களை நித்தமும் பிரிக்கின்ற
பிரிவினைவாதிகள் யார் யார்?
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க!
* வள்ளுவருக்குக் காவியைப்பூசி
ஸநாதனவாதி ஆக்க நினைக்கும்
திரிபுவாதிகள் யார்? யார்?
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.!
* நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தை
நாளும் விதைக்கும் நச்சுகள் யார்?
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க!
* திராவிடத்தைக் கொச்சைப்படுத்தி
தனித் தமிழைக் கொச்சைப்படுத்தி
தமிழ்நாட்டின் சம்பளம் வாங்க
வெட்கமில்லையா? வெட்கமில்லையா?
ஆர்.என்.ரவியே வெட்கமில்லையா?
* ஆரியத்துடன் தொடர்பற்றது
செம்மொழியாம் தமிழ்மொழி!
திராவிடத்தின் மூத்தமொழி
செம்மொழியாம் தமிழ்மொழி!
சமஸ்கிருதத்தைச் சேராமல்
தனித்தியங்கும் செம்மொழி
எம் மொழி தமிழ்மொழி!
* ஏற்க மாட்டோம்! ஏற்க மாட்டோம்!
சமஸ்கிருதத் திணிப்பை ஏற்க மாட்டோம்!
* பொறுக்க மாட்டோம்! பொறுக்க மாட்டோம்!
பண்பாட்டுப் படையெடுப்பைப்
பொறுக்க மாட்டோம்! பொறுக்க மாட்டோம்!
– திராவிடர் கழகம்
