தி.மு.க. கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்! ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் ஆணித்தரமான கருத்து!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.3– எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைந்துள்ள நிலையில் தி.மு.கழகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று ‘தி இந்து’ ஆங்கில நாளேடு ஆணித்தரமான கட்டுரை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் நேற்று (2.12.2025) வெளிவந்துள்ள சிறப்புக் கட்டுரை வருமாறு:–

‘The AIADMK is on a weak footing’ எனும் தலைப்பில் ‘தி இந்து’ நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதல் காரணாக அ.தி.மு.க-.முக்கிய நிர்வாகி ஒருவர் அக்கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைந்ததும், இதனால்,அ.தி.மு.க-. செல்வாக்கு உள்ளபகுதிகளில் அக்கட்சி மேலும் பலவீனப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அ.தி.மு.க.வின் துயரங்கள் தொடர்வதாகத் தெரிவித்துள்ள இக்கட்டுரை, அண்மைக் காலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.அன்வர் ராஜா மற்றும் வி.மைத்ரேயன் உள்ளிட்ட அ.தி.மு.க-. இரண்டாம் நிலைத் தலைவர்கள் பலர் தி.மு.க.வில் இணைந்துள்ளதையும் சுட்டிக் காட்டி உள்ளது.

அ.தி.மு.க-. பா.ஜ.க. கூட்டணி அறிவிக்கப்பட்டு, சுமார் 8 மாதங்கள் கடந்த பின்னரும், அக்கூட்டணியால் கணிசமான செல்வாக்கு உள்ள எந்தக் கட்சியையும் ஈர்க்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ள ‘தி இந்து’ நாளேட்டின் கட்டுரை, அ.தி.மு.க-. கூட்டணியின் பலவீனம் நீடிப்பதால், வலுவான நிலையில் உள்ள தி.மு.க. தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்வதுஅ.தி.மு.க. கூட்டணிக்கு முடியாத காரியமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் அரசியல்போக்கை தீர்மானிக்கும் இடத்தில் தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளதாகத் குறிப்பிட்டுள்ள ‘தி இந்து’ கட்டுரை, தி.மு.க. உறுதியாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *