சோழிங்கநல்லூர், டிச. 3– சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிட கழக கலந்துரையாடல் கூட்டம் 30.11.2025 காலை 10 மணிக்கு பெரியார் படிப்பகம் விடுதலை நகரில் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு கடவுள் மறுப்புக் கூறி தலைமையேற்று தொடங்கி வைத்தார். மாவட்டக காப்பாளர் நீலாங்கரை ஆர்டி வீரபத்திரன் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவ ராக இருந்து மறைந்த சுயமரியாதைச் சுடரொளி மயிலை ந.கிருஷ்ணன், க.வெற்றி வீரன், மாவட்டச் செயலா ளர் விஜய் உத்தமன்ராஜின் தந்தை பி.ஆர்.ஆரோக்யசாமி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தப் பட்டது.
இந்த கூட்டத்தில் வேலூர் பாண்டு, மாவட்ட தலைவர் நீலாங்கரை ஆர்டி வீரபத்திரன், காப்பாளர் தமிழினியன், மாவட்ட துணை தலைவர் பி.சி.ஜெயராமன், பொதுக்குழு உறுப்பினர் த.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், தொழிலாளர் அணி சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு அவர்களின் மேலான ஆலோசனைகளை வழங்கினார்கள்.
முடிவாக த.ஆனந்தன் நன்றி கூற கூட்டம் இனிதாக நிறைவடைந்தது.
