பழுதான மின்சாதனப் பொருட்களை குப்பையில் போடாதீர்கள்!

1 Min Read

அரசியல்

நாளுக்கு நாள் நவீன சாதனங்கள் மேலும் மேலும் தொழில் நுட்பத்தில் மேம்பட்டு வருவதால் ஓராண்டுக்கு முன்பு வாங்கிய அன்றாடம் பயன்படுத்தும் மின் சாதனங்கள் பழையதாகிவிடுகிறது. 

கிட்டத்தட்ட அனைவரது வீட்டு அலமாரிகளிலும் பழைய சார்ஜர், பழுதாகிப்போன ஹெட் செட், சார்ஜிங் வயர், பழுதுநீக்க முடியாத அலைபேசிகள் உள்ளிட்ட சில மின் பொருட்களால் இடத்தை நிரப்பி இருக்கின்றனர்.

பொதுவாக நம்மில் பலருக்கு ஒரு குணம் பழைய பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதற்காக வைத்திருப்பார்கள். ஆனால் மேலே குறிப்பிட்ட மின்னணு சாதனங்களால் ஒரு பைசா பயனும் இல்லை. அதிலும் இந்த வயர் சாதனங்கள் வீட்டில் துணி காயப்போடும் கயிறாக கூட பயன்படாது. 

அப்படி இருக்க இதனை ஏன் நாம் வைத்திருக்கவேண்டும் இதனை குப்பையில் ஒருபோதும் போடாதீர்கள் காரணம் இவைகள் ஈ வேஸ்ட் எனப்படும் ஆபத்துமிக்க மின்னணு சாதனங்கள் ஆகும். எடுத்துக்காட்டாக ஹெட் செட் வயர்களில் ஒருவித வழவழப்பான வேதிப் பொருள்கள் பூசப்படும்

மிகவும் மெல்லிய வயர்களாக இருப் பதால் அந்த வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி பழுதாகி விடக்கூடாது என்பதற்காக இந்த வேதிப்பொருள் பூசப்படும்

இது நீர் நிலைகளையும் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தும் வேதிப் பொருள் ஆகும். 

பெட்ரோலியக் கூழ்மங்களோடு ஆக்சிஜனேற்றம் கொண்ட தாமிர வேதிப்பொருள் – இவ்வகை வேதிப் பொருள் குடிக்கும் நீரில் கலந்துவிட்டால் தகவல்களை மூளைக்கு கடத்தும் நரம்பின் முனைகளை சேதப்படுத்திவிடும் என்று ஆய்வுகள் கூறுகிறது

ஆகவே சார்ஜர், வயர், ஹெட் செட் அல்லது வேறு வகையிலாக பழுதுநீக்க முடியாத மின்னணுப் பொருட்கள் போன்றவற்றை பழைய பொருட்களைப் போடும் போது அவற்றோடு சேர்த்து வெளியேற்றி விடுங்கள் அப்படிச்செய்யும் போது அது பாதுகாப்பான முறையில் மறு சுழற்சிக்காக சென்றுவிடும். 

அதனை குப்பைத்தொட்டியில் வீசி சுற்றுப்புறத்தை பாழாக்க துணை போகாதீர்கள். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *