சென்னை, டிச.2 எம்.ஜி.ஆர். நகர், சூளைப்பள்ளம் பகுதியில் ஓர் அம்மன் கோயில் உள்ளது. 1.12.2025 அன்று காலை அர்ச்சகர் கோயிலைத் திறக்க வந்தார். அப்போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது
உள்ளே சென்று பார்த்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் உண்டியலை உடைக்க முடியாமல், அதை அப்படியே தூக்கிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து அர்ச்சகர் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். கோயிலில் கொள்ளையடிக்க வந்தவர்கள், உண்டியலை உடைக்க முடியாததால், அதை அப்படியே தூக்கிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதேபோல, அருகே உள்ள மற்றொரு கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கைப் பணம் திருடப்பட்டிருந்தது.
இந்த இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் எம்.ஜி.ஆர். நகர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
