சென்னை, மே 6 சூடானில் உள் நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழ லில், அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை ‘ஆபரேஷன் காவிரி’ திட்டத்தின் மூலம் மீட்கும் பணிகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. சூடானில் இருந்து மீட்கப்பட்ட 12 தமி ழர்கள் டில்லியில் இருந்து விமானத்தில் நேற்று மாலை (5.5.2023) சென்னை அழைத்துவரப்பட்டனர். அவர்களை விமான நிலையத்தில் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்று, தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகை யில், ‘‘இதுவரை சூடான் நாட்டில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 247 பேர் ஒன்றிய, மாநில அரசுகளின் உதவி யுடன் பாதுகாப்பாக அழைத்து வரப்பட் டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 12 பேர் நேற்று (5.5.2023) சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்பட்டவர்கள் சூடானில் இருந்ததாக தகவல் கிடைத்தது. அவர்களில் 247 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். மற்றவர் களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது’’ என்றார்.
பா.ஜ.க. ஆளும் மத்தியப்பிரதேசத்தில்
குப்பை கொட்டும் பிரச்சினையில்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
ஆறு பேர் சுட்டுக்கொலை
போபால், மே 6- மத்தியப்பிரதேச மாநிலம் மொரேனாவை அடுத்துள்ள லோபோ கிராமத்தில் நிலத்தகராறு வன்முறையாக மாறியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட ஆறு பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர். மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லோபா கிராமத்தைச் சேர்ந்த தீர் சிங் தோமர் மற்றும் கஜேந்திர சிங் தோமர் ஆகி யோரின் குடும்பங்களுக்கு இடையே 5.5.2023 அன்று காலை பத்து மணியள வில் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. கடந்த 2013- ஆம் ஆண்டு குப்பைக் கழிவு களைக் கொட்டுவது தொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள் ளது. அப்போது தீர் சிங் தோமரின் குடும்பத்தை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர், இதை யடுத்து கஜேந்திர சிங் தோமர் குடும்பத்தினர் கிராமத்தை விட்டு வெளியேறிவிட் டனர். பின்னர், நீதிமன்றத்திற்கு வெளியே இரு குடும்பத்தினரும் சமர சம் செய்து கொண்டனர், இதையடுத்து கஜேந்திர சிங் குடும்பத்தினர் கிராமத் திற்குத் திரும்பியுள்ளனர். இதையறிந்த தீர் சிங் தோமரின் குடும்பத்தினர் கஜேந் திர சிங் குடும்பத்தினரைத் தாக்கியுள் ளனர். தொடர்ந்து துப்பாக்கியால் சுட்ட தில் ஆறு பேர் பலியாயினர். கொல்லப் பட்ட ஆறு பேரில் கஜேந்திர சிங் தோமர் மற்றும் அவரது இரண்டு மகன் களும் அடங்குவர்.
உடல் பருமன்? புற்றுநோய் எச்சரிக்கை
வாஷிங்டன், மே 6 உடல் பருமன் காரணமாக வயிறு, கல்லீரல், கர்ப்பபை உள்ளிட்ட 8 விதமான புற்று நோய் உருவாகும் அபாயம் உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
உடல்பருமன் மற்றும் அதிக உடல் எடை மனிதர்களுக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. அளவுக்கு அதிக மாக நொறுக்கு தீனி, மற்றும் எண்ணெய் கலந்த கொழுப்பு சத்து மிகுந்த உணவு வகைகள், துரித உணவுகள் உள்ளிட்ட வற்றை சாப்பிடுதல், உடற்பயிற்சி இன்மை போன்றவற்றால் உடல் பருமன் ஏற்படுகிறது. தற்போது உலகம் முழு வதும் 64 கோடி பெரியவர்களும், 11 கோடி குழந்தைகளும் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். அதுவே பல விதமான நோய்களுக்கு முன்னோடி யாக திகழ்கிறது. குறிப்பாக வயிறு, கல்லீரல், பித்தப்பை, கணையம், கர்ப்பப்பை, மூளை, தைராய்டு மற்றும் ரத்தப் புற்று நோய் உள்ளிட்ட 8 விதமான புற்று நோய்கள் உருவாக காரணம் என தெரிய வந்துள்ளது. இது குறித்த ஆய்வை உலகசுகாதார மய்யத்தின் பன்னாட்டு புற்றுநோய் ஆராய்ச்சி முகமையை சேர்ந்த கிரகாம் கோல்டிஷ் நடத்தினார். உடல் பருமன் மற்றும் அதிக எடையுள்ள 1000 பேரிடம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்கண்ட 8 வித புற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உடலை பருமன் ஆகாமல் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார பன் னாட்டு மய்யத்தால் அறிவுறுத்தப் பட்டுள்ளது.