பாசிச ஹிந்துத்துவாவின் வித்தை கேரளாவில் எடுபடாது சீதாராம் யெச்சூரி கருத்து

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவனந்தபுரம், மே 6- கேரள மாநிலமே ஓர் ஒற்றுமையின் கதைதான்; இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு ஜாதி, மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழும் பூமி கேரளா. ஆர்எஸ்எஸ் மற் றும் பாஜகவின் பாசிச இந்துத் துவா நிகழ்ச்சி நிரலுக்கு கேரளா ஒரு போதும் துணை நிற்காது என இந்திய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். 

கேரள தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தின் பொன்விழா கருத்தரங்கில் இந்திய மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு ‘இந் திய அரசியலில் ஆர்எஸ்எஸ் மற்றும் வகுப்புவாதம்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில்,

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தங்களுக்கு ஆதரவாக புதிய கதை களை உருவாக்கி வருகின்றன. போலி  வரலாறுகளை  பரப்புகின் றன. மூட நம்பிக்கையை புகுத்தி புதிய தலைமுறையை பகுத்தறிவு சிந்தனையிலிருந்து விலக்கி வைப்பதே இவர்களின் முயற்சி. பாடப்புத்தகங்கள் கூட அதற்காக மாற்றி எழுதப்படுகின்றன. ஊட கங்களையும் நீதி அமைப்பையும் கட்டுப்படுத்துகிறார்கள். நாட் டின் சுதந்திரமான புலனாய்வு அமைப்புகளைக் கூட பா.ஜ.க அரசியல் ஆயுதங்களாக மாற்றி யுள்ளது. நரேந்திர மோடி ஆட் சிக்கு வந்ததில் இருந்து, அமலாக் கத்துறை, சிபிஅய் போன்ற புலனாய்வு அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 95 சதவிகிதம் எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் மீது பதிவாகியுள்ளன. நாட்டின் சட்டப் பேரவைகளில் கூட, எதிர்ப்புக் குரல்களை அகற்ற பாஜக முயற்சிக்கிறது.

ஜான் பிரிட்டாஸ் (நாடாளு மன்ற உறுப்பினர்) எழுதிய கட்டுரைக்கு எதிராக அவருக்கு மாநிலங்களவைத் தலைவர் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்புகிறார். இது அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாகும். நாட்டில் நடப்பது கூட்டுக்கள வாணி முதலாளித்துவமாகும். நாட்டின் செல்வங்களை அதானிகளும், பாஜக நண்பர் களும் சூறையாடுகிறார்கள். அதானிக்கு எதிரான கேள்விகள் கூட மாநிலங்களவையில் இருந்து நீக்கப்படுகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் மத சிறுபான்மையினர் வேட்டையாடப்படுகி றார்கள். அவர்களுக்கு எதிராக புல்டோசர் அரசியல் நடத்தப் படுகிறது. பா.ஜ.க., வுக்கு அதிகா ரம் இல்லாத மாநிலங்களில், ஆளுநர்களை பயன்படுத்தி,  நிர் வாகத்தை முடக்க முயற்சிக் கின்றனர். 

ஆர்எஸ்எஸ், பாஜக விரும்புவது போல் பாசிச இந்து ராஷ்டிரம் உருவானால், இந்திய அரசமைப்புச் சட்டமே அழிக் கப்படும். பா.ஜ.க.வுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக் கூடாது’ அதற்கான முயற்சிகளை இடது சாரிகள் முன்னெடுத்து வருகின் றனர். இந்தியா வீழ்ச்சியடையா மல் இருக்க அனைவரும் ஒற்று மை யாக நிற்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *