பெரியார் என்னும் காலத்தின்
கரும்பலகை முன் நிற்கிறார்
ஆசிரியர் வீரமணி!
‘அ’ என்று எழுதுகிறார்
அது அய்யாவின் முகமாக ஒளிர்கிறது!
ஒரு பூதக்கண்ணாடியை வரைகிறார்
அதன் குவிமய்யம்
சூரியனைக் குவித்துச் சூடேற்ற
தீப்பற்றி எரிகிறது ஸநாதனம்!
ஒரு கைத்தடியை வரைகிறார்
அது சுயமரியாதையின் தலைநிமிர்வுடன்
பகுத்தறிவின் நெடுஞ்சாலையில்
படைகொண்டு நடக்கிறது!
‘குடிஅரசு
புரட்சி
பகுத்தறிவு
விடுதலை
உண்மை என
சமூகநீதியின் குரலெடுத்து
பக்கம் பக்கமாய்ப்
பாடம் நடத்துகிறார் ஆசிரியர்!
தகர்க்க முடியாத பாறைகள்
வெடித்துச் சிதறுகின்றன!
பெயர்க்க முடியாத சுவர்கள்
சாய்ந்து சரிகின்றன!
நூறாண்டு காலம்
வாழ்க என வாழ்த்தி
ஆசிரியருக்கு
காலம் வழங்குகிறது…
பெரியார் விருதாக
ஒரு நல்லாசிரியர் விருது
