அன்புசால் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.
சில நாள்களுக்கு முன் உடல்நலக் குறைவின் பொருட்டு அப்போல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்குச் சென்றதாக அறிந்தேன். அதன்பின் உடல்நலம் பெற்று இல்லம் திரும்பியது அறிந்து மகிழ்ந்தேன். மீண்டும் சிறிது உடல்நலக் கோளாறு ஏற்பட்டு இரண்டு நாள்களுக்கு முன் மருத்துவமனையில் சேர்ந்து தக்க சிகிச்சை பெற்று வருவதாகக் கேள்வியுற்றேன்.

தந்தை பெரியார் விட்டுச்சென்ற தமிழ்ச் சமுதாயம் மேன்மையுற தாங்கள் ஓய்வின்றி உழைத்து வருவது அறிவேன். தமிழ்ச் சமுதாயம் மேன்மையுறத் தங்களின் தொடர்ந்த உழைப்பு மிகவும் இன்றியமையாதது. எனவே, தாங்கள் போதிய உடல் நலத்துடனும், வலிவுடனும் இருந்தாலே அவனி சிறக்கும், மேன்மையுறும். எனவே, உங்கள் உடல் நலன் மிக மிக இன்றியமையாதது என்பது தாங்கள் அறியாததல்ல. எனவே, தகுந்த ஓய்வு எடுத்து உடல் நலனைக் கவனித்து மீண்டும் தொண்டாற்ற வேண்டும் என விழைகிறேன். தாங்கள் முழு நலம் பெற்று மீண்டும் பணியைத் தொடர என் வாழ்த்தும் விழைவும்.
அன்புடன்,
30.5.2015 க.அன்பழகன்
