சென்னை, மே 6- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட கலா ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரிபத்மனுக்கு இடைக்கால பிணை வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், பிணை மனு மீதான விசாரணையை ஜூன் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல் லைக்கு உள்ளானதாக மேனாள் மாணவி அளித்த புகாரின் அடிப் படையில் வழக்குப்பதிவு செய்த அடை யாறு அனைத்து மகளிர் காவல் துறையினர், கல்லூரியின் நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்ரல் 3ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் பிணை கோரி ஹரிபத்மன் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, வளர்ச்சியை பிடிக்காத சக ஆசிரியர்கள், மாணவி களைத் தூண்டிவிட்டு ஹரி பத்மனுக்கு எதிராக பொய் புகார் அளித்துள்ளதாகவும், 2019ஆம் ஆண்டு சம்பவம் நடந்ததாக கூறி, 4 ஆண்டுகளுக்குப் பின் புகார் அளிக்கப் பட்டுள்ளதாகவும் ஹரிபத்மன் தரப்பில் வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக, 162 மாணவிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டுள்ள தாகவும், அவர்கள், ஹரிபத்மன் மீது குற்றச் சாட்டுக்களை தெரிவித்துள்ளதாகவும், வழக்கில் தொடர் புடைய மற்றவர்களை கைது செய்ய வேண்டியுள்ளதால், பிணை வழங்க கூடாது எனவும், பிணை வழங்கினால் விசாரணை பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மகளிர் ஆணையம் தரப்பில், 103 மாணவிகளிடம் விசாரித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், விசாரணை குழுவை மாற்றியமைக்க கோரி ஏழு மாணவிகள் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம், ஜூன் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ள தாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி இளந்திரையன், ஹரிபத்மனின் பிணை மனு மீதான விசாரணையை ஜூன் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதையடுத்து இந்த மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற நீதிபதி வழக்கை திரும்பப் பெற அனுமதித்தார்.
காவல் துறையில் 621 உதவி ஆய்வாளர் பணியிடங்கள் –
ஜூன் 1 முதல் விண்ணப்பிக்கலாம்
சென்னை,மே6- தமிழ்நாடு காவல் துறையில் 621 உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஜூன் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறி வுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (டிஎன்யுஎஸ்ஆர்பி) 2023ஆம் ஆண்டு காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா ஆயுதப்படை மற்றும் தமிழ் நாடு சிறப்புக் காவல் படை) பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. காலிப் பணியிடங் களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள பட்டதாரிகள், இணையம் வழியாக ஜூன் 1 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப் பிக்கலாம். இப்பதவிகளுக்கான தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும், சரியான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஆண்களுக்கு 469 காலிப் பணியிடங் களும், பெண்களுக்கு 152 காலிப் பணியிடங்களும் என மொத்தம் 621 பணி யிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த காலிப் பணியிடங்களில் 20 சதவீதம் காவல் துறை விண்ணப்பதாரர்களுக்கும், காவல்துறை சார்ந் துள்ள வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டுப் போட்டி களில் கலந்து கொண்டவர்களுக்கு தலா 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பொதுப் பிரிவினருக்கு 31 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 26.5 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத மும், ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு 15 சதவீதமும், அருந்ததியர் வகுப்பினருக்கு 3 சதவீதமும்,பழங்குடியின ருக்கு ஒரு சத வீதமும் என ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண் டும். விண்ணப்பதாரர்கள் 20 முதல் 30 வயது உடைய வர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் பிரிவுகளுக்கு ஏற்ப வயது உச்ச வரம்புமாறுபடும். மேலும் விவரங்களை தேர்வு வாரியத்தின் tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் எனத் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.
பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்கள்
ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை, மே6- விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர்கள் தமிழ் நாடு அரசின் ஊக்கத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டம் (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளை யாட்டுக்கள் மட்டும் அதிகபட்சம் 25 நபர்கள் வரை, அதிக பட்சம் உதவித் தொகை ஓர் ஆண்டுக்கு ரூ.30 லட்சம் வரை)கடந்த 2-ஆண்டுக ளில் ஒரு முறையாவது உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பெற் றிருக்க வேண்டும். அல்லது கடந்த 2 ஆண்டு காலங்களில் ஒலிம்பிக் அல்லது உலக வாகையர் பட்டப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும்.
பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (அதிகபட்சம் 75 நபர்கள், 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட அதிகபட்சம் உதவித் தொகை ஓர் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை) அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங் களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சீனியர் வாகையர் பட்டப் போட்டி களில் தங்கப்பதக்கம் வென்றி ருக்க வேண்டும். ஒலிம்பிக், ஆசிய விளை யாட்டு போட்டி, காமன்வெல்த் போட்டியில் தனிநபர் விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றிருக்க வேண்டும். வெற்றியாளர்கள் மேம்பாட்டுத்திட்டம் (அதிக பட்சம் 100 நபர்கள், 10 மாற்றுத் திறனாளிகள் உட்பட மற்றும் அதிகபட்சம் உதவித் தொகை ஓர் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை) அரசு, அரசால் அங்கீகரிக்கப் பட்டுள்ள விளையாட்டு அமைப்பு களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்கள் மட்டும். இந்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளை யாட்டு வீரர் மற்றும் வீராங்கனை கள் தங்களது விண்ணப்பங் களை வருகிற 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையம் 95140 00777 மற்றும் 78258 83865 என்ற எண்களை, அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொள்ளலாம். -இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.