காஞ்சிபுரம் மாவட்டக் கழகத் தலைவர்
கருப்புக் கடலின்
கலங்கரை விளக்கம்!
நெருப்புக் குரல்களின்
நெடுநாள் தலைவர்!
கருப்புச் சட்டைகளின்
காவலரே வாழ்க!
ஆரிய திராவிடப் போரின்
முன் களத் தளபதி!
சூரியப் படையின்
சூத்திரதாரி!
சூத்திர மக்களின்
தலைவரே வாழ்க!
உலகத்தைச் சுற்றி
பெரியாரை விதைத்தவர்!
பெரியாரைச் சுற்ற
உலகத்தைப் பணித்தவர்!
உலகத் தமிழர்
தலைவரே வாழ்க!
இன விடுதலைக்குத்
தின ‘விடுதலை’ தரும்
விடுதலை வீரர்!
மனம் உடைந்தோர்
குணம் அடைந்திட
சிந்திக்கும் வாழ்வியல்
சிந்தனையாளரே வாழ்க!
ஆதாரமின்றி அரசியல் பேசாத
அசாதாரணத் தலைவர்!
அவதூறு வழக்கைச் சந்திக்காத
அதிசயத் தலைவர்!
அரிதாரமற்ற அற்புதத்
தலைவரே வாழ்க!
துக்ளக் துக்கடாக்களுக்குத்
துளியும் அஞ்சாத துப்பறிவாளர்!
ஆர்.எஸ்.எஸ். கிருமிகளை
அழிக்க வந்த அழிவு வேலைக்காரர்!
அசகாய அசுரனே வாழ்க!
தலைமுறை இடைவெளியைத்
தலையெடுக்க விடாமல்
மூன்று தலைமுறைக்கு
முப்பால் போல் வகுப்பெடுக்கும்
பகுத்தறிவின்
படைத்திரட்டே வாழ்க!
கழகக் கருத்துக் கருவூலம்!
பகுத்தறிவின் களஞ்சியம்!
சுயமரியாதையின் சுருக்கச்சொல்!
ஒழுக்கத்தின் உறைவிடம்!
உயர் சிந்தனைகளின் பிறப்பிடம்!
உண்மையின் உன்னதத்
தலைவரே வாழ்க!
பெரியார்க்கு மாணவரே!
அறியார்க்கு ஆசிரியரே!
உரியார்க்கு உரிய வழிகாட்டியே!
எதிரிகளும் நடுங்கும்
எங்கள் அய்யா ஆசிரியர்
கி.வீரமணியே வாழ்க!
பத்தாவது வயதில்
மேடையேறினாய்!
பத்தாவது பத்திலும்
மேடையேறி முழங்குகின்றாய்!
அடுத்த பத்திலும்
அயராது உழைத்திடவே
வாழ்க! வாழ்க!
அறிவு ஆசான் பெரியாரும்
அன்னை மணி அம்மையாரும்
எமக்களித்த அருமைத் தலைவா!
பெருமை மிகு தமிழருக்கு
அரிதாகக் கிடைத்த புதையலே!
ஒரு நூறு ஆண்டு தாண்டியும்
ஓய்வின்றி உழைத்திடவே
வாழ்க! வாழ்க!
